பெருமாநல்லூர், அவினாசியில் சமுதாய வளைகாப்பு விழா
பெருமாநல்லூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.
பெருமாநல்லூர்,
திருப்பூர் மாவட்ட சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து வாரவிழாவை யொட்டி கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. அதன்படி பெருமாநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 150 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை தட்டுகளை வழங்கி வளை காப்பு நடத்திவைத்தார். பின் னர் கர்ப்பிணிகளுக்கு 5 வகை சாதங்களை எம்.எல்.ஏ. பரிமாறினார். இதில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச் சித்திட்ட அலுவலர் சாந்தி, திருப்பூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சாமிநாதன், மாவட்ட முன்னாள் கவுன் சிலர் எஸ்.எம்.பழனிசாமி, ஊராட்சி முன்னாள் தலைவர் முத்துரத்தினம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் லட்சுமணசாமி, சந்திரசேகர், முருகேஸ்குமார், ஐஸ்வர்யா உள்பட பலர் கலந்து கொண் டனர். இதுபோல் அவினாசி வட் டாரத்தில் 120 கர்ப்பி ணிக ளுக்கு வளைகாப்பு நடத் தப் பட்டது. மேலும் கர்ப்பிணி களுக்கு வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற 5 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story