திருப்பூர் பி.என்.ரோட்டில் குழாய் உடைந்து 20 நாட்களாக வீணாகும் குடிநீர்


திருப்பூர் பி.என்.ரோட்டில் குழாய் உடைந்து 20 நாட்களாக வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 15 Sept 2018 4:26 AM IST (Updated: 15 Sept 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகராட்சிக்கு பகுதிகளில் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால் பல இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு 24 மணி நேரமும் குடிநீர் வீணாகி வருவதையும் காண முடிகிறது. இதுகுறித்து அந்தந்த பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் குடிநீர் வீணாவதை தடுப்பதற்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் திருப்பூர் பி.என். ரோட்டில் மேட்டுப்பாளையத்திற்கும் மில்லர் பஸ் நிறுத்தத்திற்கும் நடுவில் உள்ள ஒரு பகுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 20 நாட்களாக குடிநீர் 24 மணி நேரமும் தொடர்ந்து வெளியேறி சாக்கடையில் கலந்து வருகிறது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story