திருப்பூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் பட்டாசு கடைகள் நடத்த உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் பட்டாசு கடைகள் நடத்த உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர்,
தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகர போலீஸ் நிலைய கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்திட வெடிபொருள் சட்டத்தின் கீழ் தற்காலிக பட்டாசு உரிமம் பெற வேண்டும்.
இந்த உரிமம் வேண்டி மாவட்ட வருவாய் அதிகாரிக்கு விண்ணப்பிக்க விரும்புகின்றவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை வருகிற 28-ந்தேதிக்கு முன்னதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். ஏ.இ.-5 ஐ பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவம் 6 பிரதிகளும், தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் வரைபடங்கள் 6 பிரதிகள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கலாம்
மேலும், உரிமம் கோருபவர் இடத்தின் உரிமையாளராக இருந்தால் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டின் சொத்து வரி செலுத்திய ரசீது நகல், வாடகை கட்டிடமாக இருந்தால், வரி செலுத்திய ரசீது நகலுடன் இடத்தின் உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மத கடிதம், உரிய கணக்கு தலைப்பின் கீழ் அரசு கணக்கில் தற்காலிக பட்டாசு உரிம கட்டணம் ரூ.500-ஐ திருப்பூர் பாரத ஸ்டேட் வங்கியின் (ஊத்துக்குளி ரோடு) மைய கிளையில் செலுத்தியதற்கான அசல் செலுத்து சீட்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்கள் பல்வேறு நிர்வாக காரணங்களால் 28-ந்தேதிக்குள் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story