மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க.வை பா.ஜ.க. கைவிட்டு விட்டது திருச்சியில் டி.டி.வி.தினகரன் பேட்டி + "||" + ADMK, BJP Has been abandoned TTV Dhinakaran interviewed in Trichy

அ.தி.மு.க.வை பா.ஜ.க. கைவிட்டு விட்டது திருச்சியில் டி.டி.வி.தினகரன் பேட்டி

அ.தி.மு.க.வை பா.ஜ.க. கைவிட்டு விட்டது திருச்சியில் டி.டி.வி.தினகரன் பேட்டி
அ.தி.மு.க.வை பா.ஜ.க. கைவிட்டுவிட்டதாக திருச்சியில் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
திருச்சி,

அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும். அ.தி.மு.க.வினர் டெபாசிட் பெறுவதற்காக போராடி வருகின்றனர். சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை மக்கள் விரும்பாத திட்டம். இந்த திட்டம் நிச்சயம் வராது. அகலப்படுத்த வேண்டிய சாலைகள் நிறைய உள்ளது.

சென்னையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் சாலை, வேலூர் வழியாக பெங்களூரு சாலை, சென்னையில் இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக சேலம் சாலை ஆகியவற்றை அகலப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். இயற்கை வளங்கள், விவசாய நிலங்களை அழிக்காமல் இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

அ.தி.மு.க.வை பா.ஜ.க. கைவிட்டு விட்டது என்பது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேசிவருவதில் தெரிகிறது. தி.மு.க.வை நோக்கி பா.ஜ.க. செல்கிறதா? என்பது பற்றி தெரியவில்லை. தமிழகத்தில் மின்தடை தொடர்ந்து வருகிறது. காற்றாலை மின்சாரம் வாங்குவதில் பேரம் ஏற்பட்டதால் இருப்பு இருந்த நிலக்கரியை பயன்படுத்தி அனல் மின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளனர். போதுமான இருப்பு நிலக்கரி இல்லாததால் பற்றாக்குறை ஏற்பட்டு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. தினமும் 2,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. இதனை தவிர்க்க வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்து மின்உற்பத்தி செய்யலாம்.

ஏரி, குளங்கள் தூர்வாரப்படாததால் காவிரி நீர் நேரடியாக கடலில் போய் சேர்ந்துள்ளது. கடைமடைக்கு நீர் சென்றடையவில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரை விடுதலை செய்வதை அரசியலாக்க வேண்டாம். இதில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் திருமணத்துக்கு முந்தைய நாளில் புதுப்பெண் வீட்டை விட்டு ஓட்டம்
திருச்சியில் திருமணத்துக்கு முந்தையை நாளில் புதுப்பெண் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். இவர் ஆர்.பி.எப். போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் மகள் ஆவார்.
2. திருச்சியில், புதிய தமிழகம் கட்சி இளைஞர் அணி மாநில மாநாடு டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
அக்டோபர் மாதம் 6-ந் தேதி திருச்சியில் புதிய தமிழகம் கட்சி இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெற உள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
3. திருச்சியில், உலக பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி தொடங்கியது
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள சீனிவாசா திருமண மண்டபத்தில் உலக பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
4. திருச்சியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது
திருச்சியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் மேலப்புதூர் சுரங்கப்பாதையில் மீண்டும் தண்ணீர் தேங்கியது.
5. திருச்சியில் கழிவுகளில் இருந்து மதிப்புமிக்க பொருள் தயாரிப்பதற்கான இறுதிப்போட்டி
திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் கழிவுகளில் இருந்து மதிப்பு மிக்க பொருட்கள் தயாரிப்பதற்கான இறுதிப் போட்டியை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.