பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அண்ணா பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரியலூர்,
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தொடர்ந்து அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில், கட்சி நிர்வாகிகள் அரியலூர் ஒற்றுமை திடலில் இருந்து ஊர்வலமாக அரியலூர் பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில், கட்சியினர் தி.மு.க. நகர கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக அரியலூர் பஸ் நிலையத்திற்கு வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். திராவிடர் கழக நகர தலைவர் தங்கவேல் தலைமையிலும், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் துரை மணிவேல், ம.தி.மு.க. நகர செயலாளர் மனோகரன், எம்.ஜி.ஆர். கழக மாவட்ட செயலாளர் கலைவாணன் ஆகியோர் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில், ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில், கட்சியினர் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டிலிருந்து ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அ.ம.மு.க.வினர் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவிலிருந்து ஊர்வலமாக அண்ணா சிலைக்கு வந்தனர். பின்னர் நகர செயலாளர் முரளி தலைமையில் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தா.பழூர் ஒன்றிய தி.மு.க. அலுவலகம் எதிரில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு ஒன்றிய கழக செயலாளர் கண்ணன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு 500 மரக்கன்றுகள் வழங்கினர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பெரம்பலூர் புறநகர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில், கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் தந்தை பெரியார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சி நிர்வாகிகளுக்கும், பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ராசாராம், மாவட்ட மாணவரணி செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., மருதராஜா எம்.பி., ஒன்றிய செயலாளர்கள் சிவபிரகாசம், கர்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story