மாவட்ட செய்திகள்

பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை + "||" + On the birthday anniversary of Anna's statue,

பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காரைக்குடி,

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி., காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், மாவட்ட அவைத்தலைவர் காளிதாசன், மாவட்ட துணைச் செயலாளர் கற்பகம் இளங்கோ, வக்கீல் ராஜூ, நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர், ஜெ.பேரவை நகர செயலாளர் கோவிந்தன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் நகர செயலாளர் குணசேகரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, கல்லல் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்துரை மற்றும் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதேபோல் திராவிடர் கழகம் சார்பில் மண்டல தலைவர் சாமி.திராவிடமணி, மாவட்ட தலைவர் அரங்கசாமி, மாவட்ட செயலாளர் வைகறை உள்ளிட்டோரும், அ.ம.மு.க. சார்பில் மாவட்ட மகளிரணி துணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ் மற்றும் கட்சியினரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அண்ணா பிறந்தநாளையொட்டி திருப்பத்தூர் காந்திசிலை அருகே கூடிய அ.தி.மு.க.வினர் ஒன்றியச் செயலாளர் ராமலிங்கம் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, அங்கிருந்து ஊர்வலமாக பஸ் நிலையம் மற்றும் மதுரை ரோடு வழியாக அண்ணாசிலையை சென்றடைந்தனர். பின்னர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் அசோகன், அ.தி.மு.க. நகர செயலாளர் இப்ராம்ஷா, ஒன்றிய துணை செயலாளர் முருகேசன், முன்னாள் ஒன்றிய தலைவர் சிதம்பரம், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் நாகராஜன், மூர்த்தி, ஜெ.பேரவை முருகேசன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தி.மு.க. சார்பில் காந்தி சிலை பகுதியில் கூடிய தி.மு.க.வினர் அங்கிருந்து ஒன்றிய செயலாளர் சண்முகவடிவேல் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு அண்ணா சிலையை வந்தடைந்தனர். பின்னர் அங்கு அண்ணா சிலைக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சாக்ளா, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் உதயசண்முகம், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் காளிமுத்து, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர்கள் சந்திரன், பாண்டியன், முகமதுகனி உள்பட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மானாமதுரையில் அ.ம.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர்கள் சரவணன், வேலுச்சாமி, நகர செயலாளர் கோபால் ஆகியோர் தலைமையில் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் தே.மு.தி.க. சார்பில் மாவட்ட துணை செயலாளர் மாயழகு, ஒன்றிய செயலாளர் ராமு, நகர செயலாளர் முத்துகுமார், பாலா உள்ளிட்டோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.