மாவட்ட செய்திகள்

சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் புதிய சிகிச்சை மையங்கள், அமைச்சர் பாஸ்கரன் திறந்துவைத்தார் + "||" + Sivagangai Government Hospital New treatment centers

சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் புதிய சிகிச்சை மையங்கள், அமைச்சர் பாஸ்கரன் திறந்துவைத்தார்

சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் புதிய சிகிச்சை மையங்கள், அமைச்சர் பாஸ்கரன் திறந்துவைத்தார்
சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் கண்ணுக்கான புதிய சிகிச்சை மையங்களை அமைச்சர் பாஸ்கரன் திறந்துவைத்தார்.

சிவகங்கை,

சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிய சிகிச்சை மையங்கள் மற்றும் பொது சுகாதார வளாகங்கள் திறப்பு விழா, கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு பி.ஆர்.செந்தில்நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கி புதிதாக தொடங்கப்பட்டுள்ள 14 படுக்கைகளை கொண்ட புற்றுநோய் சிகிச்சை பிரிவு மையம், 25 படுக்கைகள் கொண்ட கண் அறுவை சிகிச்சை பிரிவு மையம், 20 படுக்கைகள் கொண்ட சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு மையம் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான குளியலறை மற்றும் கழிப்பறை ஆகியவற்றை திறந்துவைத்தார்.

அதன்பிறகு அமைச்சர் பாஸ்கரன் கூறியதாவது:– சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிறந்து விளங்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வருகிறது. சிவகங்கை பகுதி மிகவும் பின் தங்கிய பகுதியாகும். ஆனாலும் இங்குள்ள மருத்துவமனையில் மதுரை, சென்னை உள்ளிட்ட வளர்ந்த நகரங்களுக்கு ஈடாக நவீன உபகரணங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. அத்துடன் உட்கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்பட்டு மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

அத்துடன் சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் பெரியாறு பாசன பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா, உறைவிட டாக்டர் மகேந்திரன், நிலைய அலுவலர் குழந்தை ஆனந்தன், துணை நிலை அலுவலர் ராஜராஜன், சிவகங்கை கோட்டாட்சியர் செல்வக்குமாரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் முன்னாள் எம்.எல்.ஏ சந்திரன், நகர செயலாளர் ஆனந்தன், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சசிகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 41 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா ஸ்கூட்டர்களை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். மேலும் 26 பேருக்கு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்ட விலையில்லா தையல் எந்திரங்களையும் அவர் வழங்கினார்.தொடர்புடைய செய்திகள்

1. வெறுப்பு அரசியல் வேண்டாம்: அன்பால் அரவணைப்போம் - நமச்சிவாயம் அறிவுறுத்தல்
வெறுப்பு அரசியல் வேண்டாம், அனைவரையும் அன்பால் அரவணைப்போம் என்று இளைஞர் காங்கிரசாருக்கு அமைச்சர் நமச்சிவாயம் அறிவுறுத்தினார்.
2. கோவையை போல் தமிழகத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நூலகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
கோவையை போல் தமிழகத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நூலகம் திறக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
3. எச்.ராஜா, கருணாஸ் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
“எச்.ராஜா, கருணாஸ் எம்.எல்.ஏ. விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்“ என்று மதுரையில் நேற்று இரவில் அளித்த பேட்டியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
4. இந்திய அளவில் ஊழலை தி.மு.க.வினர் தான் அறிமுகப்படுத்தினார்கள் - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு
இந்திய அளவில் ஊழலை தி.மு.க.வினர் அறிமுகப்படுத்தினார்கள் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
5. டி.டி.வி. தினகரனுக்கு மக்களை பற்றி எதுவும் தெரியாது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த டி.டி.வி.தினகரனுக்கு மக்களை பற்றி எதுவும் தெரியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.