மாவட்ட செய்திகள்

பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை + "||" + Birthday Anna statue Political parties Garlands of honor

பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
நாகையில் அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாகப்பட்டினம்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாள் விழாவையொட்டி நாகையில் பாரதி மார்க்கெட் அருகே உள்ள அண்ணாசிலைக்கு நாகை மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தங்க.கதிரவன் தலைமை தாங்கினார். வெளிப்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் சக்திவேல், நகர அவை தலைவர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட மீனவரணி துணை செயலாளர் கண்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் நவாப் ஜான், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் செந்தில் சிவக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் சுதாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


அண்ணா திராவிடர் கழகம் சார்பில் புத்தூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட செயலாளர் கருப்பம்புலம் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் பிளமினோமேரி, வேதாரண்யம் நகர செயலாளர் கவிபாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் புத்தூர் அண்ணாசிலைக்கு நாகை தெற்கு மாவட்ட செயலாளர் சந்திரமோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மஞ்சுளா சந்திரமோகன், உலகநாதன், ரவிச்சந்திரன், ரகு, பிரபாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.