மாவட்ட செய்திகள்

மன்னார்குடியில் சமுதாய வளைகாப்பு விழாஅமைச்சர் காமராஜ் பங்கேற்பு + "||" + In Mannarkudi Community Baby Shower Ceremony Minister Kamaraj participated

மன்னார்குடியில் சமுதாய வளைகாப்பு விழாஅமைச்சர் காமராஜ் பங்கேற்பு

மன்னார்குடியில் சமுதாய வளைகாப்பு விழாஅமைச்சர் காமராஜ் பங்கேற்பு
மன்னார்குடியில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
சுந்தரக்கோட்டை,

விழாவிற்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் ராஜம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு, மன்னார்குடி, கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட 200 கர்ப்பிணி பெண்களுக்கு சேலை, வளையல், மஞ்சள், குங்குமம், கடலை மிட்டாய் உள்பட 9 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.


இதில் மன்னார்குடி உதவி கலெக்டர் பத்மாவதி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் உமா, துணை இயக்குனர் டாக்டர் ஸ்டான்லிமைக்கேல், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொன்வாசுராமன், மன்னார்குடி நகர கூட்டுறவு வங்கி தலைவர் குமார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (மன்னார்குடி) ஜெனிபர்கிரேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆலங்குடியில் 200 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையுடன் சமுதாய வளைகாப்பு விழா
ஆலங்குடியில் சீர்வரிசையுடன் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. மேலும் 5 வகையான உணவுகளும் வழங்கப்பட்டது.
2. பெருமாநல்லூர், அவினாசியில் சமுதாய வளைகாப்பு விழா
பெருமாநல்லூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.
3. சமுதாய வளைகாப்பு விழா: கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள்
அரியலூரில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. சீர்வரிசை பெற்ற பெண்களுடன் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...