என்ஜின் கோளாறால் ஐதராபாத் எக்ஸ்பிரஸ் நடுவழியில் நின்றது சென்னை ரெயில் 1½ மணி நேரம் தாமதம்


என்ஜின் கோளாறால் ஐதராபாத் எக்ஸ்பிரஸ் நடுவழியில் நின்றது சென்னை ரெயில் 1½ மணி நேரம் தாமதம்
x
தினத்தந்தி 16 Sep 2018 12:00 AM GMT (Updated: 15 Sep 2018 8:50 PM GMT)

என்ஜின் கோளாறால் ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னை ரெயில் 1½ மணி நேரம் தாமதமாக மும்பை வந்தது.

அம்பர்நாத், 

என்ஜின் கோளாறால் ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னை ரெயில் 1½ மணி நேரம் தாமதமாக மும்பை வந்தது.

நடுவழியில் நின்ற ரெயில்

மும்ைப சி.எஸ்.எம்.டி. நோக்கி நேற்று ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் மதியம் 12 மணியளவில் மெயின் வழித்தடத்தில் உள்ள பத்லாப்பூர்- அம்பர்நாத் இடையே வந்து கொண்டிருந்த போது, திடீரென என்ஜினில் பழுது ஏற்பட்டது.

இதன் காரணமாக அந்த ரெயில் நடுவழியில் நின்றது. இதுபற்றி டிரைவர் கார்டுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து, என்ஜினில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

வெகுநேரமாக ரெயில் நடுவழியில் நின்றதால் அந்த ரெயிலில் இருந்த பயணிகள் பொறுமை இழந்தனர். பலர் உடைமைகளை எடுத்துக்கொண்டு தண்டவாளத்தில் இறங்கி நடையை கட்டினர்.

சென்னை ரெயில் தாமதம்

கல்யாணுக்கு பிறகு இரண்டு தண்டவாளங்களே இருப்பதால் மின்சார ரெயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ரெயில் சேவை இன்றி பயணிகள் அவதி அடைந்தனர். இந்த நேரத்தில் மும்பை நோக்கி வந்த சென்னை எக்ஸ்பிரஸ் பத்லாப்பூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

அந்த ரெயிலில் வந்த பயணிகளும் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.

இந்தநிலையில், சுமார் 1½ மணி நேரத்துக்கு பிறகு என்ஜின் கோளாறு சரி செய்யப்பட்டு ஐதராபாத் எக்ஸ்பிரஸ் கிளம்பி சென்றது. அதைத்தொடர்ந்து, நடுவழியில் நிறுத்தப்பட்ட சென்னை எக்ஸ்பிரசும் 1½ மணி நேரம் தாமதமாக மும்பை வந்தடைந்தது.

Next Story