மாவட்ட செய்திகள்

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் + "||" + Certificates for the winners of the tournament

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருவள்ளூர்,

தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு, கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசு, 2-ம் பரிசு மற்றும் 3-ம் பரிசை பெற்ற 9 மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன் வாழ்த்துகளை தெரிவித்து பாராட்டு சான்றிதழ்களையும், ரொக்கப்பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

இதற்கான விழா திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) உமா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் திவ்யஸ்ரீ ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...