ஒரு மணி நேரத்தில் 28 செல்போன்கள் திருட்டு விநாயகர் சதுர்த்தி பொருட்கள் வாங்க திரண்டவர்களிடம் கைவரிசை


ஒரு மணி நேரத்தில் 28 செல்போன்கள் திருட்டு விநாயகர் சதுர்த்தி பொருட்கள் வாங்க திரண்டவர்களிடம் கைவரிசை
x
தினத்தந்தி 16 Sept 2018 4:00 AM IST (Updated: 16 Sept 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

கல்யாண் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்திக்கு பொருட்கள் வாங்க திரண்டவர்களிடம் மர்மகும்பல் ஒரு மணி நேரத்தில் 28 செல்போன்களை திருடியது.

தானே, 

கல்யாண் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்திக்கு பொருட்கள் வாங்க திரண்டவர்களிடம் மர்மகும்பல் ஒரு மணி நேரத்தில் 28 செல்போன்களை திருடியது.

செல்போன்கள் திருட்டு

விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த புதன்கிழமை அன்று மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்க அதிகளவில் மக்கள் திரண்டனர். கல்யாண் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் கல்யாண், டோம்பிவிலி, உல்லாஸ்நகர், டிட்வாலா, முர்பாட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு இருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூட்டத்தில் மக்களோடு, மக்களாக புகுந்த திருட்டு கும்பல் இரவு 7 மணியில் இருந்து 8 மணிக்குள் 28 செல்போன்களை திருடியது தற்போது தெரியவந்து உள்ளது.

செல்போனை பறிகொடுத்தவர்கள் இதுபற்றி பஜார்பேத் போலீசில் புகார் கொடுத்து உள்ளனர்.

மோட்டார் சைக்கிள்

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல் அன்றைய தினம் உல்லாஸ்நகரை சேர்ந்த மனோகர் பாட்டியா என்பவர் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்கு மாலை வாங்க வந்துள்ளார். அப்போது, அவர் தனது மோட்டார் சைக்கிளை மார்க்கெட்டில் நிறுத்தி உள்ளார். இந்தநிலையில் அந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடிச்சென்றுள்ளார். இது குறித்து மனோகர் பாட்டியா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவிழா சந்தர்ப்பத்தை பயன்படுத்தி செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிய கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.

Next Story