காஞ்சீபுரத்தில் அண்ணா பிறந்த நாள் விழா


காஞ்சீபுரத்தில் அண்ணா பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 15 Sep 2018 9:43 PM GMT (Updated: 15 Sep 2018 9:43 PM GMT)

காஞ்சீபுரத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

காஞ்சீபுரம்,

அண்ணாவின் பிறந்தநாள் விழாவையொட்டி, காஞ்சீபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்று அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணாவின் அரிய புகைப்படங்களை பார்வையிட்டார். மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர்முகமது, காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி ராஜீ, காஞ்சீபுரம் தாசில்தார் காஞ்சனமாலா ஆகியோரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

மேலும், அண்ணா நினைவு இல்லத்தில், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வாலாஜாபாத் கணேசன், வி.சோமசுந்தரம், மாவட்ட பிரதிநிதி முத்தியால்பேட்டை ஆர்்.வி.ரஞ்சித்குமார் உள்பட திரளானோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்கள். காஞ்சீபுரம் நகராட்சி முன்புள்ள அண்ணா சிலைக்கு, வாலாஜாபாத் பா.கணேசன் மாலை அணிவித்து வணங்கினார்.

பட்டு கூட்டுறவு சங்கம்

காஞ்சீபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் அண்ணா படத்துக்கு சங்கத்தலைவர் செல்வராஜ் மாலை அணிவித்தார். சங்க நிர்வாக இயக்குனர் எஸ்.பிரகாஷ் இனிப்புகளை வழங்கினார். அண்ணா தமிழ்வளர்ச்சி மன்றம் சார்பில் மன்றத்தின் மாநில நிறுவனர் கவிஞர் கூரம் துரை அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்று அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். பிறகு காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு லட்டுகளை வழங்கினார்.

காஞ்சீபுரம் நகராட்சி முன்புள்ள அண்ணா சிலைக்கு எம்.எல்.ஏ.க்கள் தா.மோ.அன்பரசன், க.சுந்தர், எழிலரசன், தி.மு.க. நிர்வாகிகள் ஆறுமுகம், வி.எஸ்.ராமகிருஷ்ணன், தி.அன்பழகன் உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து வணங்கினர். பிறகு அவர்கள் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்று அண்ணா சிலைக்கு மாலைகள் அணிவித்து இனிப்புகளை வழங்கினார்கள். காஞ்சீபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வளையாபதி தலைமையில் ம.தி.மு.க. வினர் நகராட்சி முன்புள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர். பின்னர் இவர்கள் அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்று மாலைகள் அணிவித்தனர்.

Next Story