ராசிபுரம், பள்ளிபாளையத்தில் அண்ணா உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை


ராசிபுரம், பள்ளிபாளையத்தில் அண்ணா உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 16 Sept 2018 3:52 AM IST (Updated: 16 Sept 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம், பள்ளிபாளையத்தில் அண்ணா உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ராசிபுரம்,

ராசிபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா புதிய பஸ் நிலையம் அருகில் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட அண்ணா படத்திற்கு நகர அ.தி.மு.க.செயலாளரும், நகர வங்கித்தலைவருமான எம்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகளும் மாலை அணிவித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் நகர அ.தி.மு.க. அவைத்தலைவர் வி.கே.ஆர்.கே.ராமசாமி, முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் கந்தசாமி, நகர வங்கி துணைத்தலைவர் வெங்கடாசலம், நகர அ.தி.மு.க.துணை செயலாளர் மனோகரன், வீட்டு வசதி சங்கத்தலைவரும், அ.தி.மு.க. பொருளாளருமான கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராசிபுரம் நகர எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ரங்கசாமி, நகர இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன், நகர மாணவர் அணி செயலாளர் ஜெகன், முன்னாள் சூப்பர் பட்டு சொசைட்டி தலைவர் செல்வம், முன்னாள் கவுன்சிலர் சீரங்கன், சண்முகசுந்தரம், மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் கலைவாணி, நகர மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்ணா பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு குமாரபாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் நகரச்செயலாளரும், நகர கூட்டுறவு வங்கித்தலைவருமான ஏ.கே.நாகராஜ் தலைமையில் அ.தி.மு.க.வினர் கட்சி அலுவலகத்தில் இருந்து பயணியர் மாளிகை வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் துணைச்செயலாளர் திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் வெங்கடாசலம், சேகர் குதிரை வண்டி சங்கத்தலைவர் வெங்கிடு மற்றும் அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி தலைமையில் அ.தி.மு.க.வை சேர்ந்த மற்றொரு அணியினர் பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் இருந்து ஊர்வலமாக சென்றனர். இதில் முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர்கள் ரவி, அர்ச்சுனன், பாஸ்கரன், சிங்காரவேலு, செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பயணியர் மாளிகை அருகே இருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளிபாளையம் ஒன்றியம், நகர அ.தி.மு.க. சார்பில் ஆவரங்காடு எம்.ஜி.ஆர்.சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது. விழாவுக்கு ஒன்றிய குழு முன்னாள் தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. நகர செயலாளரும், முன்னாள் நகராட்சி தலைவருமான வெள்ளிங்கிரி வரவேற்று பேசினார்.

பின்னர் அ.தி.மு.க.வினர் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டர்.

Next Story