மாவட்ட செய்திகள்

பழனி, கன்னிவாடி, வடமதுரையில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் + "||" + Vinayagar statues with police protection in Palani, Kanniwadi, Vadamadurai

பழனி, கன்னிவாடி, வடமதுரையில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

பழனி, கன்னிவாடி, வடமதுரையில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
பழனி, கன்னிவாடி, வடமதுரையில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
பழனி,

சதுர்த்தி விழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வல மாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்து சக்தி சங்கமம் சார்பில், பிரதிஷ்டை செய்யப்பட்ட 68 விநாயகர் சிலைகள் ஊர்வலம் பழனியில் நடந்தது.


முன்னதாக வாகனங்களில் கொண்டு வரப்பட்ட சிலைகளுக்கு பழனி பாத விநாயகர் கோவில் அருகே சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதனை யடுத்து தாரை தப்பட்டை முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. அடிவாரம் சன்னதி வீதி, பாளையம், பஸ் நிலையம் ரவுண்டானா, காந்தி ரோடு, பெரியகடை வீதி, ரத வீதி வழியாக சண்முகநதிக்கு சிலைகள் கொண்டு செல்லப் பட்டு கரைக்கப்பட்டன. இதற் கான ஏற்பாடுகளை இந்து சக்தி சங்கம ஒருங்கிணைப் பாளர் ஸ்ரீதர் மற்றும் நிர்வாகி கள் செய்திருந்தனர்.

இதேபோல் கன்னிவாடி, வெள்ளமரத்துப்பட்டி, ரெட்டி யார்சத்திரம், மணியகாரன் பட்டி, கரிசல்பட்டி, குரும்ப பட்டி, தருமத்துப்பட்டி ஆகிய இடங்களில் இந்து அமைப் பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட் டிருந்தது. அந்த சிலைகள் கன்னிவாடிக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்டு, ஊர்வல மாக எடுத்து செல்லப் பட்டன.

இந்தநிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநில செயலாளர் தாமு வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாரிமுத்து, பொதுச் செயலாளர் சங்கர்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித் தனர். பின்னர் வாகனங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப் பட்டு கன்னிவாடி, நவாப் பட்டி, மணியகாரன்பட்டி, டி.புதுப்பட்டி வழியாக ஆலத் தூரான்பட்டிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மச்சக் குளத்தில் சிலைகள் கரைக் கப்பட்டன.

இந்து முன்னணி சார்பில் வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் பிரதிஷ்டை செய்யப் பட்ட 30 விநாயகர் சிலைகள் வடமதுரைக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்டன. பின்னர் வடமதுரையின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப் பட்டு தும்மலக்குண்டு சாலை யில் உள்ள நரிப்பாறைகுளத்தில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒட்டன்சத்திரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. ஒட்டன்சத்திரம் சோதனைச்சாவடியில் தொடங்கிய இந்த ஊர்வலத் திற்கு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்க டேஷ் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு பொது செய லாளர் ரவிபாலன் சிறப் புரையாற்றினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் கே.பி.நல்லசாமி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தில் 33 விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் மற்றும் பழனி மெயின்ரோடு, தாராபுரம் ரோடு வழியாக சென்று விருப்பாட்சி தலையூத்தில் கரைக்கப்பட்டது.தொடர்புடைய செய்திகள்

1. பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் தடுப்புச்சுவர் சீரமைக்கும் பணி தீவிரம்
பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் தடுப்புச்சுவர் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...