திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா


திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 16 Sept 2018 4:27 AM IST (Updated: 16 Sept 2018 4:27 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், அ.தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், திருவண்ணாமலை-வேலூர் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன் தலைமை தாங்கினார். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஜெ.எஸ்.செல்வம் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக விவசாய பிரிவு செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக நடந்து சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கட்சி நிர்வாகிகளுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கினார்.

இதில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இ.என்.நாராயணன், மாவட்ட பேரவை துணை செயலாளர் முரளிமோகன், மாணவர் அணி செயலாளர் பீரங்கி வெங்கடேசன், தென்மாத்தூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எம்.கலியபெருமாள், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கே.தருமராஜ், நகரமன்ற முன்னாள் உறுப்பினர் என்.பர்குணகுமார், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் கோவிந்தராஜ், ஒன்றிய சிறுபான்மை செயலாளர் எ.அல்லாபகஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story