உள்ளாட்சி தேர்தல் நடந்தால்தான் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேறும் ஜி.கே.வாசன் பேட்டி


உள்ளாட்சி தேர்தல் நடந்தால்தான் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேறும் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 16 Sept 2018 4:47 AM IST (Updated: 16 Sept 2018 4:47 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் நடந்தால்தான் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேறும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

கீழ்பென்னாத்தூர்,

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த மேக்களூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா மற்றும் கட்சி நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்ற அரசாக இந்த அரசு இருக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக த.மா.கா. கிராம, நகர, வட்டார ரீதியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 8 வழிச்சாலை திட்டம் பொறுத்தவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக உள்ளது. 8 வழிச்சாலைக்கு விவசாயிகளிடம் கருத்து கேட்ட பின்பு தான் திட்டத்தை தொடங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடந்தால்தான் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேறும்’ என்றார்.

Next Story