பனை ஓலையில் செய்தது.. பளிச்சென்று மின்னுது..
‘கற்பகதரு’ என்று அழைக்கப்படும் பனைமரத்தின் அனைத்து பகுதிகளுமே மக்களுக்கு பலனளிக்கக்கூடியது.
பனை ஓலையில் செய்யப்படும் அழகு நிறைந்த கலைப் பொருட்களுக்கு தற்போது அதிக மவுசு ஏற்பட்டிருக்கிறது. அவை மக்களுக்கு அத்தியாவசியமாக பயன்படவும் செய்கிறது. கண்களைக் கவரும் அந்த பொருட்களை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள்.
பனை ஓலையில் பயனுள்ள கலைப்பொருட்களை தயாரிக்கும் பணியில் திருச்செந்தூர் பகுதியில் உள்ள மணப்பாடு கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் பனை ஓலையில் கூடை, தட்டு வகைகள், மணிபர்ஸ், குப்பைக்கூடை, வெங்காய கூடை, விதவிதமான விசிறிகள், பூக்கூடைகள், அலங்கார பொருட்கள் வைப்பதற்கான கூண்டுகள், தொப்பி, பாய், குழந்தைகளை மகிழ்விக்கும் கிலுக்குகள், பேனா வைக்கும் கூடுகள் உள்ளிட்ட 25 வகையான பொருட்களை கலைநயத்தோடு தயார் செய்கிறார்கள்.
அதற்கு தேவையான பனை ஓலைகளை குலசேகரன்பட்டினம், உவரி போன்ற ஊர்களில் இருந்து அவர்களே வாங்கி வருகின்றனர். அந்த பனை ஓலைகளை வீட்டில்வைத்து கலைப் பொருட்களாக தயார் செய்கிறார்கள். அவைகளுக்கு வண்ணம் தீட்டி நேர்த்தியாக வடிவமைக்கிறார்கள். கவர்ச்சிகரமான இந்த கலைப் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. அவர்கள் தயார் செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்காக மணப்பாடு கிராமத்தில் பனை ஓலை தொழிற் கூட்டுறவு சங்கம் பல்லாண்டு காலமாக இயங்கிவருகிறது. அதன் மூலம் கலைப் பொருட்கள் சென்னை, ஐதராபாத், மும்பை, பெங்களூரு போன்ற பல நகரங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தனியார் ஏஜென்சி மூலம் கலைப்பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இந்த கலைப்பொருட்களுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. இங்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளும் கூட்டுறவு சங்கத்தில் பனை ஓலை கலைப் பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இதனால் மணப்பாடு கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு வருகிறது.
பத்து ஆண்டுகளாக பனை ஓலையில் கலைப்பொருட்கள் தயாரித்து வரும் மணப்பாடு செல்வம்மாள் சொல்கிறார்:
“நான் மணப்பாடு புதுக்குடியில் ஓலை வாங்கி கலைப் பொருட்கள் பின்னுகிறேன். பனை ஓலை மற்றும் பனை ஈர்க்கு ஆகிய இரண்டையும் வைத்து பல்வேறு வகையான பொருட்களை தயார் செய்யலாம். எனக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாய் கிடைக்கும்.மேலும் கூட்டுறவு சங்கத்தில் இருந்து ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட தொகையை வழங்குவார்கள். அதை நான் சேமிக்கிறேன். இந்த அழகான கலைப்பொருட்களை தயாரிக்கும்போது என் மனதும் மகிழ்ச்சியடைகிறது’’ என்றார்.
அதே கிராமத்தை சேர்ந்த சீதா: “நாற்பது வருடங்களாக இந்த கலைப் பொருட்கள் தயாரிப்பு பணியில் ஈடுபடுகிறேன். எனக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இதில் கிடைக்கும் வருவாய் அவர்களின் படிப்பு செலவுக்கும், திருமண செலவுக்கும் உதவியிருக்கிறது. மீனவ கிராமத்தை சேர்ந்த நாங்கள் கடலை நம்பிதான் வாழ்கிறோம். மழை காலங்களிலும், மீன் பிடி தடை காலங்களிலும் கடலுக்கு செல்ல முடிவதில்லை. அப்போது இந்த தொழில் எங்கள் வாழ்க்கைக்கு கை கொடுக்கும். எங்களு க்கு பனை மரங்கள் வாழ்வளிக்கின்றன. அவைகளை வெட்டுவதற்கு அரசு அனுமதிக்கக்கூடாது. பனை மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கூடுதலாக பனை விதைகளை விதைக்க அரசு முன்வர வேண்டும்’’ என்றார்.
மணப்பாடு பெண் தொழிலாளர்கள் பனை ஓலை தொழிற் கூட்டுறவு சங்க மேலாளர் பெல்சிட்டா கூறியதாவது:
‘‘எங்கள் சங்கத்தில் 750 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கிராமத்தில் ஏராளமான பெண்கள் பனை பொருட்கள் தயார் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவரவர் வீடுகளில்வைத்தே பொருட்களை தயார் செய்கிறார்கள். மாற்றுத்திறனாளிகள், கல்லூரி படிக்கும் மாணவிகளும் வீடுகளில் பனை ஓலை பொருட்களை வடிவமைக்கிறார்கள். இந்த கலைப் பொருட்கள் மக்களுக்கு மிகுந்த பலன் அளிப்பதாகவும் உள்ளது. இதன் பயன்பாடு உடலுக்கு குளிர்ச்சி தரும். இதில் வைக்கப்படும் பொருட்கள் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும். உணவுப் பொருட்களை இதில் வைத்தால் அதிக மணம் தரும். பனை ஓலைப் பொருட்களால் ஏராளமான பலன்கள் இருக்கின்றன.
இந்த கலைப் பொருட்களை தயார் செய்யும் பெண்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் தயாரித்த பொருட்களை எல்லாம் எங்களிடம் கொண்டு வரு வார்கள். தயாரித் திருக்கும் பொருட் களுக்கு ஏற்ப சம்பளம் வழங்க ப்படும். உறுப்பினர் களின் வரவு-செலவு கணக்கு களை தனியாக அட்டை போட்டு குறித்து வைப்போம். ஆண்டுக்கு ஒரு முறை கூடி வரவு-செலவு கணக்குகளின் அடிப்படையில் லாபத்தையும் பங்கிட்டு கொடுப்போம். எங்கள் கூட்டுறவு சங்கத்துக்கு கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசு விருது வழங்கி வருகிறது.
தற்போது பனை ஓலை கிடைப்பது அரிதாகி விட்டது. கூடுதல் விலை கொடுத்து பனை ஓலை வாங்கி பதப்படுத்தி, பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பொருட்களுக்கு பல விதமான வண்ணங்கள் தீட்டுவதால் சந்தையில் மவுசு கூடுகிறது. இந்த தொழில் மூலம் வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிக்கலாம்.
அதனால் இந்த தொழிலை பாதுகாக்க அரசு முன்வர வேண்டும். பச்சை பனை மரத்தை யார் வெட்டினாலும் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார், அவர்.
ஓலை.. கலை.. விலை..
கண்களைக் கவரும் இந்த கலைப்பொருட்களை உருவாக்கும் மூலப் பொருளாக இருப்பவை, பனையின் இளம் ஓலைகள். இதனை குருத்து ஓலை என்று அழைக்கிறார்கள். அதனை சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து பெண்கள் வாங்குகிறார்கள். ஒரு பனையில் இருந்து கிடைக்கும் குருத்து ஓலைக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை கொடுக்கிறார்கள். அந்த ஓலையை வாங்கி 2 நாட்கள் வெயிலில் காயவைக்கிறார்கள். ஓலை நன்றாக காய்ந்ததும், பொருட்கள் செய்யும் பதத்துக்கு வந்துவிடுகிறது.
முதலில் ஓலைகளில் உள்ள ஈர்க்குகளை சிறிய கத்தி மூலம் பிரித்து எடுக்கிறார்கள். பின்னர் செய்யப்படுகின்ற பொருட்களுக்கு ஏற்ப ஓலைகள் சிறிய இயந்திரங்கள் மூலம் வெட்டப்படுகின்றன. பெரிய அளவிலான கலைப்பொருட்கள் தயார்செய்யும்போது பனை ஓலை பெரிய அளவிலும், சிறிய பொருட்கள் தயார் செய்ய பனை ஓலைகளை சிறிய அளவிலும், தேவைக்கு தக்கபடி தனித்தனியாக வெட்டி எடுக்கிறார்கள்.
அதை வைத்து பெண்கள் தேவையான கலைப் பொருட்களை உருவாக்குகிறார்கள். கூடை, பெட்டி, கிலுக்கு, தட்டு உள்ளிட்ட பொருட்களில் ஒன்றை செய்ய, சராசரியாக இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்கிறார்கள். நுணுக்கமான சிறிய பொருட்கள் என்றால், அதற்கு அதிக நேரம் ஆகிறது. சிறிய பின்னலுடைய தொப்பி, தட்டுகள், வரவேற்பு அலங்கார கூடைகள் உள்ளிட்ட கலை நயமிக்க பொருட்கள் செய்ய ஒரு நாள் கூட ஆகிறது. பெரிய அளவிலான பொருட்களை கலை நயத்துடன் செய்ய 2 நாட்கள் வரை ஆகும் என்கிறார்கள். அத்தகைய பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல விலை கிடைக்கிறது.
பனை ஓலைகளில் பயன்படுத்த மஞ்சள், நீலம், இளஞ்சிவப்பு, பிரவுன் போன்ற நிறங்களில் சாயங்கள் கிடைக்கின்றன. தேவைப்படும் நிறத்தை, தேவையான அளவுக்கு வாங்கிக்கொள்கிறார்கள். அதனை பெரிய பாத்திரத்தில் தண்ணீரில் கலக்கி, கொதிக்கவிடுகிறார்கள். கொதிக்கும்போது, எத்தனை ஓலைகளில் அந்த சாயத்தை ஏற்றவேண்டுமோ அதனை அந்த நீரில் முக்கிவைத்து கொதிக்கவிடுகிறார்கள். கொதிக்கும்போது அந்த சாயம் ஓலைகளில் நன்றாக ஏறுகிறது. பின்பு அதனை வெளியே எடுத்து காயவைக்கிறார்கள். நன்றாக காய்ந்த உடன் அந்த ஓலையில் இருந்து தேவையான பொருட்கள் செய்யப்படுகின்றன.
கலைப் பொருட்கள் செய்யும் இந்த தொழிலை பெண்கள் பூர்வீகமாகவே மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு தேவைப்படும்போது பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பெரும்பாலான பெண்கள் இதனை பகுதிநேர தொழிலாக்கி தங்கள் வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள். இந்த கலைப்பொருட் கள் உத்தேசமாக 20 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை விற்பனையாகிறது.

Related Tags :
Next Story