‘ஆன்லைன்’ வர்த்தகத்தை கண்டித்து தமிழகத்தில் 28-ந் தேதி மருந்து கடைகள் அடைப்பு
‘ஆன்லைன்’ வர்த்தகத்தை கண்டித்து தமிழகத்தில் 28-ந் தேதி மருந்து கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி,
திருச்சி அருகே உள்ள துடையூரில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மருந்து விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று 2018-2021-ம் ஆண்டுக்கான சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில தலைவராக திருச்சியை சேர்ந்த தில்லை மெடிக்கல்ஸ் கே.மனோகரனும், பொதுச்செயலாளராக சேலத்தை சேர்ந்த கே.கே. செல்வனும், பொருளாளராக சென்னையை சேர்ந்த எஸ்.இளங்கோவனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- அகில இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளன முடிவின்படி ‘ஆன்லைன்’ மூலம் மருந்து விற்பனை செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 24 மணி நேரம் கடையடைப்பு போராட்டம் நடத்துவது. அன்றைய தினம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது, மத்திய அரசின் மருந்து வணிகர்கள் எதிர்ப்பு கொள்கையை கண்டித்து வருகிற 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை மருந்து விற்பனை நிறுவனங்களில் அனைவரும் கருப்பு ‘பேட்ஜ்’ அணிவது, மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களையும் நேரில் சந்தித்து மனு கொடுப்பது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை விளக்கி மாநில தலைவர் கே. மனோகரன், பொதுச்செயலாளர் கே.கே. செல்வன் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மருந்துகள் உயிர்காக்கும் பொருளாகும். எனவே இதனை டீ சர்ட், காலணி வாங்குவது போல் ‘ஆன்லைன்’ மூலம் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது. ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கும்போது மருந்துகள் மாறிவிடுவதற்கும், காலக்கெடு முடிந்த மருந்துகளை அனுப்பி விடுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இப்படி வந்து விடும் சூழ்நிலையில் சர்க்கரை நோயாளிகள் உடனடியாக பாதிப்பு அடைவார்கள். தடை செய்யப்பட்ட போதை மருந்துகள், வயாகரா, தூக்க மாத்திரைகளை மாணவ- மாணவிகள் பெற்றோருக்கு தெரியாமல் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். பெண்கள் கர்ப்பதடை மாத்திரைகளை எப்படி வேண்டுமானாலும் வாங்கி கொள்வார்கள். மொத்தத்தில் ‘ஆன்லைன் இ- மார்மஸி’ முறை கலாசார சீரழிவுக்கு வழிவகுத்து விடும். அதனால் இதற்கு அனுமதி வழங்க கூடாது என்பதற்காக தான் கடையடைப்பு போராட்டம் நடத்துகிறோம்.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரம் மருந்து கடைகள் மூடப்படும். மருத்துவமனைகளுடன் சேர்ந்து இயங்கும் 5 ஆயிரம் மருந்து கடைகள் மட்டும் திறந்து இருக்கும். இந்தியா முழுவதும் அன்றைய தினம் 8 லட்சம் மருந்து கடைகள் மூடப்படும். எனவே பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான மருந்துகளை வாங்கிக்கொண்டு எங்களது போராட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்களின் நலன் கருதி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்காக (எமர்ஜென்சி) மருந்துகள் வழங்குவதற்கு மாவட்ட வாரியாக தொடர்பு கொள்வதற்கான செல்போன் எண்களை பின்னர் அறிவிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story