நெல்லை மண்டல கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் ரூ.18.40 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு கலெக்டர் ஷில்பா தகவல்


நெல்லை மண்டல கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் ரூ.18.40 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 16 Sep 2018 10:00 PM GMT (Updated: 16 Sep 2018 7:52 PM GMT)

நெல்லை மண்டல கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் இந்த ஆண்டு ரூ.18.40 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

நெல்லை, 

நெல்லை மண்டல கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் இந்த ஆண்டு ரூ.18.40 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

தீபாவளி விற்பனை

நெல்லை சந்திப்பில் உள்ள காந்திமதி கோ-ஆப்டெக்ஸ்சில், கைத்தறி ஆடைகள், பட்டு புடவைகள், சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்பு, காட்டன் சேலைகள், சுடிதார்கள், போர்வை, துண்டுகள், வேட்டி, சட்டைகள் உள்ளிட்ட ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றன. தீபாவளி பண்டிகையையொட்டி இங்கு 30 சதவீத தள்ளுபடியில் கைத்தறி ஆடைகள் விற்பனை நடக்கிறது.

இந்த விற்பனையை கலெக்டர் ஷில்பா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் நெல்லை டவுன் கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்த பைரவி, கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் இசக்கிமுத்து, மேலாளர் கணபதி சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரூ.18.40 கோடி இலக்கு

இதுகுறித்து கலெக்டர் ஷில்பா கூறுகையில், நெல்லை மண்டலத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.13 கோடியே 92 லட்சத்திற்கு விற்பனை நடந்து உள்ளது. இந்த ஆண்டு ரூ.18 கோடியே 40 லட்சத்திற்கு பொருட்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காந்திமதி கோ-ஆப்டெக்ஸ்சில், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.3 கோடியே 23 லட்சத்திற்கு விற்பனை நடந்து உள்ளது. இந்த ஆண்டு ரூ.4 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்றார்.

Next Story