சிவகங்கை அருகே வாலிபரை அரிவாளால் வெட்டி வீடுகளுக்கு தீவைப்பு, 7 பேர் கைது
சிவகங்கை அருகே வாலிபரை அரிவாளால் வெட்டி வீடுகளுக்கு தீவைத்த 3 பெண்கள் உள்பட 7 பேரை கைது போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்துள்ள மட்டாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பொண்ணுச்சாமி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்தநிலையில் பொண்ணுச்சாமி சாவுக்கு, அதே கிராமத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் காரணம் என்று உறவினர்கள் கூறினர். மேலும் சாமியாருக்கு சொந்தமான 2 வீடுகளுக்கு உறவினர்கள் தீவைத்தனர். இத்துடன் வீட்டின் முன்பு நின்றிருந்த காரை அடித்து நொறுக்கினர். மேலும் சாமியாரின் உறவினர் அஜீத்குமார்(வயது 18) என்பவரை அரிவாளால் வெட்டினர். இதில் காயமடைந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் சிவகங்கை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி, பொண்ணுச்சாமியின் உறவினர்களான செந்தில்முருகன்(31) உள்பட 13 பேர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களில் செந்தில்முருகன், ராஜேசுவரி(37), முத்துபாண்டி(53), தமிழ்ச்செல்வி(23), ஜெயக்குமார்(31), சசிகலா(22), மணிகண்டன்(43) ஆகிய 7 பேரை போலீசார் கைதுசெய்தனர்.