சிவகாசி அருகே மின்னல் தாக்கி பட்டாசு ஆலை மேலாளர், பெண் சாவு
சிவகாசி அருகே மின்னல் தாக்கி, பட்டாசு ஆலை மேலாளரும், பெண்ணும் பரிதாபமாக இறந்தனர்.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). இவர் செவல்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று மாலை மழை பெய்ததால் முன்னதாக வீட்டிற்கு கிளம்பினார். செல்லும் வழியில் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள ஜெகநாதபுரத்தை சேர்ந்த முத்து மனைவி குருவம்மாள் (45). மழை பெய்ததால் இவர் பருத்திக்காட்டில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
கல்வெட்டான்பட்டி அருகே வந்தபோது மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story