பா.ஜனதாவில் சேர்ந்தால் பணம், பதவி தருவதாக கூறி என்னிடம் ஆசை காட்டினர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு


பா.ஜனதாவில் சேர்ந்தால் பணம், பதவி தருவதாக கூறி என்னிடம் ஆசை காட்டினர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 Sept 2018 3:30 AM IST (Updated: 17 Sept 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவில் சேர்ந்தால் பணம், பதவி தருவதாக கூறி என்னிடம் அக்கட்சியினர் ஆசைகாட்டினர் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனில்சிக்கமாது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

மைசூரு, 

பா.ஜனதாவில் சேர்ந்தால் பணம், பதவி தருவதாக கூறி என்னிடம் அக்கட்சியினர் ஆசைகாட்டினர் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனில்சிக்கமாது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேட்டி

கர்நாடகத்தில் நடந்து வரும் கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். மேலும் இரு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை ‘ஆபரேசன் தாமரை’ மூலம் இழுக்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் மைசூருவில் எச்.டி.கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வான அனில் சிக்கமாது (காங்கிரஸ்) நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதாவினர் திட்டமிட்டுள்ளனர். பா.ஜனதாவை சேர்ந்த சிலர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர்கள் எங்கள் கட்சியில் சேர்ந்தால் பணம், பதவி தருவதாக கூறி ஆசைகாட்டினர்.

சித்தராமையா எனது தலைவர்

ஆனால் நான் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகமாட்டேன். பா.ஜனதாவில் சேரமாட்டேன் என்றும் கூறிவிட்டேன். ஆனால் என்னுடன் பேசியவர்கள் யார்? என்பதை தற்போது கூறமாட்டேன். உரிய நேரத்தில் தெரிவிப்பேன்.

எனக்கு அரசியல் வாழ்க்கையை கொடுத்தது, காங்கிரஸ் கட்சி தான். எனது தலைவர் சித்தராமையா. நான் எப்போதும் காங்கிரசில் இருந்து விலகி செல்ல மாட்டேன். நாங்கள் சித்தராமையா கூறுவது படி நடந்து வருகிறோம். அவரது பேச்சை நான் எப்போதும் மீறமாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story