தேர்வு நேரத்தில் டி.வி. பார்க்காதே என தாயார் திட்டியதால், பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை


தேர்வு நேரத்தில் டி.வி. பார்க்காதே என தாயார் திட்டியதால், பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 17 Sept 2018 6:00 AM IST (Updated: 17 Sept 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

தேர்வு நேரத்தில் டி.வி. பார்க்காதே என தாயார் திட்டியதால் மனம் உடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கெங்கவல்லி,

கெங்கவல்லி பேரூராட்சி 8-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் மந்திரி, கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சங்கீதா. இவர்களுடைய மகள் பிரியதர்ஷினி (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

நேற்று முன்தினம் இவர் வீட்டில் டி.வி. பார்த்துள்ளார். அப்போது அவரது தாயார், காலாண்டு தேர்வு நடைபெறுகிறது. எனவே டி.வி. பார்க்காமல், படிக்குமாறு மகளிடம் கூறியுள்ளார்.

இதனால் மனம் உடைந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டில் இருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து அதில் இருந்து மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பிரியதர்ஷினி நேற்று இறந்தார்.

இது குறித்து கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

Next Story