பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மின் ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
திருவாரூர்,
திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் முதலாவது திட்ட பேரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைப்பின் திட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ராஜேந்திரன் (திருவாரூர்), வீரபாண்டியன் (மன்னார்குடி), மன்னார்குடி கோட்ட தலைவர் சகாயராஜ், ஒப்பந்த ஊழியர் பிரதிநிதி வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாநில துணைத்தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.380 தினக்கூலி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்களை கொண்டு நிரப்பிட வேண்டும். பகுதி நேர பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பாதிப்பை ஏற்படுத்தும் உதய் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு மின் விபத்து ஏற்படும்போது அதற்கான மருத்துவ செலவினை மின் வாரியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சி.ஐ.டி.யூ. மாநிலக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன், மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல், அமைப்பின் திட்ட செயலாளர் (பொறுப்பு) சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story