மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு + "||" + The villagers petition to the Collector to permanently close the Sterlite plant

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மடத்தூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி,


தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தூத்துக்குடி அருகே உள்ள மடத்தூர் கிராம மக்கள், மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையால் எங்கள் பகுதியில் நிலம், நீர், காற்று மாசுபட்டு உள்ளது. கடந்த மே மாதம் தமிழக அரசின் உத்தரவின்படி ஆலை மூடப்பட்டது. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகியது. தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால உத்தரவாக ஆலைக்கு நிர்வாக பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கியது.

ஆனால் அதற்கு மாறாக ஆலை நிர்வாகம் எங்கள் பகுதி உள்பட பல பகுதிகளில் குழந்தைகளின் படிப்பு செலவுகளை ஏற்பதாகவும், மக்களுக்கு பண உதவி செய்வதாகவும் பொய் பிரசாரம் செய்து அமைதியை பிளவுப்படுத்தும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள்.
இதனால் எங்கள் பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் அமைச்சரவையை கூட்டி சிறப்பு சட்டம் ஏற்படுத்தி ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.