வேன் கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் 15 பேர் படுகாயம்


வேன் கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் 15 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 18 Sept 2018 3:00 AM IST (Updated: 18 Sept 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

பணகுடி அருகே வேன் கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் 15 பேர் காயமடைந்தனர்.

பணகுடி, 

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஷாம் பிரசாத் (வயது 48). இவரது தலைமையில் அந்த மாநிலத்தை சேர்ந்த 23 பேர் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்தனர். பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள் நேற்று ஒரு வேனில் ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டனர்.

நேற்று மதியம் நெல்லை மாவட்டம் பணகுடி நான்கு வழிச்சாலையில் உள்ள முத்துசாமிபுரம் வந்தபோது வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் வேன் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் வேனில் இருந்தவர்கள் 15 பேர் காயமடைந்து கூச்சலிட்டனர்.

அப்போது அந்த வழியாக நெல்லைக்கு காரில் வந்து கொண்டிருந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உடனடியாக தனது காரை நிறுத்தினார். காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கும், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் பணகுடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு கவிழ்ந்து கிடந்த வேனை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story