காதலிக்கு வேறு இடத்தில் திருமணம்: அந்தமானில் இருந்து ஊருக்கு வந்த ராணுவ ஊழியர் தற்கொலை
காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நடந்ததால் அந்தமானில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வந்திருந்த ராணுவ ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையை பூர்வீகமாக கொண்டவர் அழகர். இவர் அந்தமானில் வேலைபார்த்து வருகிறார். இவரது மகன்ஆறுமுகம் (வயது22). இவர் அங்கு ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் மெக்கானிக்காக இருந்துள்ளார். இருவரும் அங்கு தங்கியிருந்த நிலையில் அருப்புக்கோட்டையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளனர்.
அங்கு அழகரின் மகள் வீடு உள்ளது. தந்தையும், மகனும் அங்கு தங்கி இருந்தனர். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஆறுமுகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்தமானில் ஆறுமுகம் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் ஊருக்கு வந்து விட்ட நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் நடந்து விட்டதாக தெரிகிறது. இந்த தகவல் தெரியவந்ததால் ஆறுமுகம் வாழ்க்கையில் வெறுப்படைந்து இந்த துயர முடிவை தேடிக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story