மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்; வகுப்புகளை புறக்கணித்தனர்
மன்னார்குடி அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுந்தரக்கோட்டை,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு மாணவிகளுக்கு தனியாக கழிவறை வசதி அமைக்க வேண்டும், விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஆனால் மாணவ-மாணவிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து நேற்று மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
அப்போது கல்லூரியில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், கல்லூரி வளாகத்தை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story