மாவட்ட செய்திகள்

திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 32½ பவுன் நகைகள் கொள்ளை + "||" + Home school teacher at home Jewelry robbery

திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 32½ பவுன் நகைகள் கொள்ளை

திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 32½ பவுன் நகைகள் கொள்ளை
திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் அரசு பள்ளிக்கூட ஆசிரியர் வீட்டில் 32½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. அவர் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றதை நோட்டமிட்டு மர்மஆசாமிகள் கைவரிசை காட்டியுள்ளனர்.

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டை சேர்ந்தவர் மாதவன் (வயது 53). புதுவை மாநிலம் ஆலங்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 14–ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் மாதவன் திருப்பதிக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு வீடு திரும்பினார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றபோது, பீரோ இருந்த அறை உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 32½ பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு மாதவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மதிப்பு ரூ.7½ லட்சம் ஆகும்.

இதுபற்றி தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர் ஸ்ரீதர் அங்கு வந்து தடயங்களை சேகரித்தார்.

மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. பக்கத்து வீட்டில் உள்ள மாமரத்தை மோப்பநாய் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மாதவன் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றதை நோட்டமிட்டு தெரிந்து கொண்ட மர்ம ஆசாமிகள், பக்கத்து வீட்டில் உள்ள மாமரத்தின் மீது ஏறி மாதவன் வீட்டு மாடியின் பின்பக்கம் குதித்து, அங்குள்ள இரும்பு கதவை உடைத்து வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளை நடந்த அறையில் இருந்த மற்றொரு இரும்பு பீரோவை மர்ம நபர்கள் திறக்க முயன்றுள்ளனர். ஆனால் முடியாததால் விட்டுச்சென்றனர். இதனால் அந்த பீரோவில் இருந்த நகைகள் தப்பின.

கொள்ளை தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளை நடந்த வீட்டின் மாடி வழியாக பீரோ வைத்திருக்கும் அறைக்கு வரும் வழி வெளிநபர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. எனவே அந்த வீட்டில் கட்டுமான பணி, பிளம்பர் வேலை செய்தவர்களுக்கு அதுபற்றி தெரிந்து இருக்க வேண்டும். அவர்கள் தான் இந்த கைவரிசையில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். இதைத்தொடர்ந்து அவர்களின் விவரங்களை சேகரித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

வீடுகள் அதிகம் உள்ள பகுதியில் கொள்ளை நடந்த சம்பவம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



தொடர்புடைய செய்திகள்

1. அந்தியூரில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
அந்தியூரில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ.52 ஆயிரம் மதுபாட்டில்கள்- ரூ.10 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை
நீடாமங்கலம் அருகே, மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். அந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. தவளக்குப்பம் அருகே, நள்ளிரவில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை
தவளக்குப்பம் அருகே நள்ளிரவில் சாப்ட்வேர் என்ஜினீயரின் வீட்டில் புகுந்த கொள்ளைக்கும்பல் தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும் தப்பிச் செல்லும்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியையும் பறித்துக்கொண்டு தப்பினர்.
4. பெருந்துறை அருகே வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது 17¾ பவுன் நகை மீட்பு
பெருந்துறை அருகே வீடு புகுந்து திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 17¾ பவுன் நகை மீட்கப்பட்டது.
5. நகை, பணம் இல்லாததால் ரெயில்வே ஊழியர் வீட்டுக்கு தீ வைத்த கொள்ளையர்கள்
நகை, பணம் இல்லாததால் ரெயில்வே ஊழியர் வீட்டுக்கு கொள்ளையர்கள் தீ வைத்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை