கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் - கலெக்டரிடம், எ.வ.வேலு எம்.எல்.ஏ. கோரிக்கை மனு


கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் - கலெக்டரிடம், எ.வ.வேலு எம்.எல்.ஏ. கோரிக்கை மனு
x
தினத்தந்தி 17 Sep 2018 11:30 PM GMT (Updated: 17 Sep 2018 10:32 PM GMT)

கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம், எ.வ.வேலு எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம், தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை நகரில் கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலை அமைக்க மாவட்ட தி.மு.க. சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை நகரில் காஞ்சி சாலை மற்றும் போளூர் சாலை சந்திப்பு, வார்டு எண் 1-ல் அமைந்துள்ள அண்ணா நுழைவு வாயில் அருகே அல்லது வார்டு எண் 30-ல் அமைந்துள்ள தண்டராம்பட்டு மற்றும் மணலூர்பேட்டை சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் ஓர் இடத்தில் கருணாநிதி சிலை அமைத்திட அரசின் அனுமதி கோரப்படுகிறது.

மேலும் சிலை நிறுவ அரசு அனுமதி அளித்த பின்பு சிலையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய பணிகளை மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அப்போது கழக தணிக்கைக்குழு உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான கு.பிச்சாண்டி, மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால், மு.பெ.கிரி எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட அமைப்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை மற்றும் பலர் உடனிருந்தனர்.

முன்னதாக திருவண்ணாமலை நகர தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எ.வ.வேலு எம்.எல்.ஏ. தலைமையில், தி.மு.க.வினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story