சிறு வணிகர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை வரியில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்


சிறு வணிகர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை வரியில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 Sept 2018 4:15 AM IST (Updated: 19 Sept 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை வரியில் இருந்து சிறுவணிகர்களுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று வெற்றிலை பாக்கு வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

மதுரை,

மதுரை வெற்றிலை–பாக்கு பீடி சிகரெட் வர்த்தக சங்கத்தின் பவள விழா, காமராஜர் சாலையில் உள்ள செல்லம் செஞ்சுரி ஹாலில் நடந்தது. சங்க பொதுச்செயலாளர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். பொருளாளர் துர்கையாண்டி ஆண்டறிக்கை வாசித்தார். சங்கர், அய்யாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். அசல் மலபார் பீடி அதிபர் சுரேந்திரன், 5–நம்பர் பூமார்க் பீடி அதிபர் அப்துல்ஹமீது ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

பவள விழா மலரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட, மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணன் பெற்று கொண்டார்.

இந்த விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம் வருமாறு:–

மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பது மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திட்டப்பணிகள் நிறைவேற்றுவதற்காக பிரதமர் மோடிக்கும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றி தெரிவிப்பது. அனைத்து பள்ளிகளிலும் சிறு வியாபாரிகளின் குழந்தைகளுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும். வெற்றிலை பாக்கு, காபி–டீ வியாபாரிகளை தமிழக மருத்துவ காப்பீட்டில் சேர்த்து கொள்ள வேண்டும்.

அனைத்து நதிகளையும் தேசியமயமாக்க வேண்டும். சிறுவியாபாரிகளுக்கு உதவித்தொகை மற்றும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். வியாபாரத்திற்கு பயன்படும் வணிக சிலிண்டருக்கு மானியம் வழங்க வேண்டும்.

வெற்றிலை–பாக்கு, பெட்டிக்கடை, காபி கடைகளுக்கு மாநகராட்சி போட்ட திடக்கழிவு மேலாண்மை வரியில் இருந்து சிறுவணிகர்களுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல் சிறு வியாபாரிகளுக்கு மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story