மும்பை, டெல்லியில் 11 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
மும்பை, டெல்லியில் உள்ள 11 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் ரூ.29 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை,
துபாயை சேர்ந்த ஹவாலா ஆபரேட்டர் பங்கஜ் குமார். இவர் மீது ரூ.3 ஆயிரத்து 700 கோடி ஹவாலா மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதில், மும்பையில் உள்ள அவரது நிறுவனம் ஹவாலா பணத்தை வைரம் இறக்குமதி என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவது தெரியவந்தது.இந்த நிலையில், அவருக்கு ஹவாலா பண கடத்தலுக்கு உதவி புரிந்ததாக கருதப்படும் நிறுவனங்களுக்கு சொந்தமான மும்பை மற்றும் டெல்லியில் உள்ள 11 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதில், பங்கஜ் குமாருக்கு ஹவாலா பணம் அனுப்புவதற்கு உதவி செய்த 2 பட்டய கணக்கர்களின் அலுவலகம் மற்றும் சுங்கத்துறை ஏஜெண்டு ஒருவரின் அலுவலகமும் அடங்கும். அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.29 லட்சத்து 19 ஆயிரம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story