மாவட்ட செய்திகள்

பான்பராக், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்றால் நடவடிக்கை, போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை + "||" + Operation of prohibited items such as Banpaku, Gudka etc.

பான்பராக், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்றால் நடவடிக்கை, போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

பான்பராக், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்றால் நடவடிக்கை, போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
பான்பராக், குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு மாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை நகர பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவையில் பான்பராக், குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சிலர் மறைமுகமாக வைத்து இந்த பொருட்களை விற்பனை செய்து வருவதாக புகார்கள் வருகின்றன. 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு போதைப்பொருட்களை விற்றால் அது பெரும் குற்றமாகும். எனவே கடைகளில் யாராவது போதைப்பொருட்கள் விற்பனை செய்து வந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும்.

போலீசாரும், உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளும் வந்து ஆய்வு செய்யும் போது உங்கள் கடைகளில் ஏதாவது ஒரு பாக்கெட் போதைப்போருள் இருந்தாலும் அவர்கள் குற்றவாளிகளாகவே கருதப்படுவார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நாளை(வியாழக்கிழமை) முதல் போலீசாரும், அதிகாரிகளும் ஒவ்வொரு கடைகளாக சென்று ஆய்வு மேற்கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புடைய செய்திகள்

1. சபரிமலையில் இதேபோன்ற நிலை தொடர்ந்தால் உயிரிழப்பு நேரிட வாய்ப்பு ஐகோர்ட்டில் போலீஸ் அறிக்கை
சபரிமலையில் இதேபோன்ற நிலை தொடர்ந்தால் உயிரிழப்பு நேரிட வாய்ப்பு உள்ளது என ஐகோர்ட்டில் போலீஸ் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
2. ‘சாதிக்க துணிந்தவர்களுக்கு வயது தடையில்லை’ 4 ஏக்கரில் சந்தன தோப்பு உருவாக்கிய 70 வயது விவசாயி
‘சாதிக்க துணிந்தவர்களுக்கு வயது ஒரு தடையே இல்லை’ என்பதற்கு எடுத்துக்காட்டாக சென்னிமலை அருகே 4 ஏக்கரில் சந்தன தோப்பை 70 வயது விவசாயி ஒருவர் உருவாக்கி உள்ளார்.
3. இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் பெண் கொலை: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
இளம்பெண்ணை கிண்டல் செய்த தகராறில் கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளம்பெண்ணின் தாயார் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
4. புழல் சிறையில் போலீஸ் பக்ருதீன் 3–வது நாளாக உண்ணாவிரதம்
புழல் சிறையில் டி.வி. உள்ளிட்ட வசதிகள் மீண்டும் ஏற்படுத்தி தரக்கோரி புழல் சிறையில் போலீஸ் பக்ருதீன் நேற்று 3–வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார்.
5. தவளக்குப்பம் அருகே கத்தியை காட்டி கல்லூரி மாணவன் கடத்தல்; போலீஸ் நிலையத்தை மக்கள் முற்றுகை
தவளக்குப்பம் அருகே தானாம்பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த பொறியியல் கல்லூரி மாணவனை கத்தி முனையில் ஒரு கும்பல் கடத்தி சென்றது. அதை அறிந்த கிராம மக்கள் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.