மாவட்ட செய்திகள்

போலராய்டு மொபைல் பிரிண்டர் + "||" + Polaroid Mobile Printer

போலராய்டு மொபைல் பிரிண்டர்

போலராய்டு மொபைல் பிரிண்டர்
செல்போனில் புகைப்படம் எடுப்பது நம் அன்றாட பொழுதுபோக்காகவே மாறிவிட்டது. அப்படி நாம் அழகாக எடுக்கும் புகைப்படங்களை பிரிண்ட் செய்ய ஸ்டூடியோவிற்கு செல்ல வேண்டியது இல்லை.
போலராய்டு மொபைல் பிரிண்டர் நம்மிடம் இருந்தால் வேண்டிய படங்களை, வீட்டிலேயே பிரிண்ட் செய்து கொள்ளலாம். 500 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் இயங்கக்கூடிய இந்த பிரிண்டரின் எடை வெறும் 187 கிராம் தான். அதனால் எங்கு சென்றாலும் நம்முடன் எடுத்து செல்ல முடியும்.

ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் இந்த பிரண்டர், புளூடூத் வசதி மூலமாக புகைப்படங்களை பிரிண்ட் செய்கிறது. அதுவும் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே பிரிண்ட் நமக்கு கிடைத்துவிடுமாம்.

மற்ற பிரிண்டர்களை போல அடிக்கடி இங்க் மாற்றும் தொல்லைகள் இதில் கிடையாது. புகைப்படங்களை தேவைக்கேற்றார் போல திருத்தம் செய்தும் பிரிண்ட் எடுக்கலாம். ஏதேனும் எழுதுவது அல்லது எமோஜி(ணிவிளியிமி) சேர்ப்பதாக இருந்தாலும் நமது போனில் உள்ள படத்தில் சேர்த்து, பின்னர் பிரிண்ட் செய்யலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 25 புகைப்படங்கள் பிரிண்ட் செய்ய முடியும். போனை போல யூ.எஸ்.பி. சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். கருப்பு, வெள்ளை, சிவப்பு, நீலம் ஆகிய நான்கு வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் விலை 12,800 ரூபாய். 

அதிகம் வாசிக்கப்பட்டவை