மேலூர் அருகே மரத்தில் மோதி நொறுங்கிய அரசு பஸ், 11 பேர் படுகாயம்


மேலூர் அருகே மரத்தில் மோதி நொறுங்கிய அரசு பஸ், 11 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Sept 2018 4:30 AM IST (Updated: 20 Sept 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே அரசு பஸ் மரத்தில் மோதி நொறுங்கியது.

மேலூர்,

காரைக்குடியில் இருந்து சிவகாசிக்கு பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று மேலூர் ரோட்டில் வந் தது. கீழவளவு அருகே புறாக்கூடுமலை என்னுமிடத்தில் வந்தபோது எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று இந்த பஸ்சின் மீது மோதியது.

இதில் பஸ் டிரைவர் காரைக்குடியை சேர்ந்த ஜெயசிங்சாமுவேல் (வயது49) என்பவருக்கு கண்ணில் அடிபட்டதால் பஸ் நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்கம் முழுமையாக நொறுங்கியது. பஸ் டிரைவர், கண்டக்டர் பாலசுப்பிரமணியம் (50) மற்றும் பயணிகள் 9 பேர் என 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story