மாவட்ட செய்திகள்

பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்றம் + "||" + The case against Nirmaladevi was transferred to a different court

பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்றம்

பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்றம்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரும் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை விருதுநகர் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. 3 பேருக்கும் கடந்த 17–ந் தேதி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. பேராசிரியை நிர்மலாதேவி உள்பட 3 பேரும் நேற்று மீண்டும் விருதுநகர் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி, பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரிடமும் குற்றப்பத்திரிகை நகல்களை பெற்றுக்கொண்டீர்களா? என கேட்டார். 3 பேரும் பெற்றுக்கொண்டதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றப்படுவதாக தெரிவித்த மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி, வருகிற 24–ந் தேதி இவர்கள் 3 பேரையும் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

பேராசிரியை நிர்மலாதேவி கடந்த 17–ந் தேதி விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது தனக்கு மதுரை மத்திய சிறையில் பிற கைதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் தன்னை வேறு சிறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். நேற்று இந்த கோரிக்கையை மனுவாக கொடுத்தார். மாஜிஸ்திரேட்டு மனுவை பெற்றுக்கொண்டு, இதுகுறித்து பரிசீலிப்பதாக கூறினார்.

இதையடுத்து பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரும் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. கூட்டப்புளியில் மீன்பிடிப்பதில் இருதரப்பினர் மோதல்; 16 பேர் மீது வழக்கு
கூட்டப்புளியில் மீன்பிடிப்பதில் இருதரப்பினர் மோதிக் கொண்டனர். இதுதொடர்பாக 16 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2. மேல்மருவத்தூர் அருகே 8–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது
மேல்மருவத்தூர் அருகே 8–ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
3. கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கர்ப்பிணியாக்கி திருமணத்துக்கு மறுத்தவர் மீது வழக்கு
கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. காதலித்த பெண் இறந்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
காதலித்த பெண் இறந்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. தவளக்குப்பம் அருகே கத்தியை காட்டி கல்லூரி மாணவன் கடத்தல்; போலீஸ் நிலையத்தை மக்கள் முற்றுகை
தவளக்குப்பம் அருகே தானாம்பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த பொறியியல் கல்லூரி மாணவனை கத்தி முனையில் ஒரு கும்பல் கடத்தி சென்றது. அதை அறிந்த கிராம மக்கள் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.