மாவட்ட செய்திகள்

பாம்பன் கடல் பகுதியை ஹெலிகேமராவில் படம் பிடித்த வாலிபர்கள், போலீசார் விசாரணை + "||" + Young people who are shooting in the Pamban Sea are Helicamera

பாம்பன் கடல் பகுதியை ஹெலிகேமராவில் படம் பிடித்த வாலிபர்கள், போலீசார் விசாரணை

பாம்பன் கடல் பகுதியை ஹெலிகேமராவில் படம் பிடித்த வாலிபர்கள், போலீசார் விசாரணை
பாம்பன் கடல் பகுதியில் ஹெலிகேமராவை பறக்க விட்டு படம் பிடித்த சென்னையை சேர்ந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரம்,

தமிழக கடல் பகுதிகளில் ராமேசுவரம் அதிக முக்கியத்தவம் வாய்ந்த பகுதியாகும். இலங்கை கடல் பகுதி அருகாமையில் அமைந்துள்ளதே அதற்கு காரணமாகும். மேலும பாதுகாப்பு கருதி ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் பாலம் மற்றும் தீவு பகுதிகளை ஹெலிகேமரா மூலம் படம் பிடிக்க போலீசாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாம்பன் ரெயில்வே பாலம், ரோடு பாலத்தின் மேல் பகுதியில் நேற்று ஹெலிகேமரா மூலம் சில வாலிபர்கள் படம் பிடித்தனர். இதுபற்றி பாம்பன் போலீசாருக்கு தகவல் கிடைத்து. போலீசார் அங்கு சென்று தெற்குவாடி கடற்கரையில் இருந்து ஹெலிகேமரா மூலம் படம் பிடித்து கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் தாய் எங்கள் தமிழ்நாடு என்ற தலைப்பில் ஒரு பாடலுக்கு தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களை ஹெலிகேமரா மூலம் படம் பிடித்து வருவதாகவும், பாம்பன் பகுதியில் ஹெலிகேமரா மூலம் படம் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்று விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டதில் ஹெலிகேமரா மூலம் படம் பிடிக்க அனுமதி பெற்றிருப்பது தெரியவந்தது.

அதன் பின்பு அந்த வாலிபர்கள், தூக்குப்பாலம் வழியாக கப்பல் மற்றும் மீன்பிடி படகுகள் கடந்து சென்றதை ஹெலிகேமரா மூலம் படம் பிடித்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. குழு அமைத்து நிதி வசூல் செய்து முறைகேடு: கவர்னர் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
குழு அமைத்து தொழிற்சாலைகளில் நிதி வசூலித்து முறைகேடு செய்துள்ளனர். இதுகுறித்து கவர்னர் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
2. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர் 29-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு தனபால் இந்த வழக்கை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
3. கோர்ட்டில் அரிவாளுடன் ரகளை செய்த வாலிபரால் பரபரப்பு; போலீசார் விசாரணை
சிவகங்கை கோர்ட்டில் அரிவாளுடன் ரகளை செய்த வாலிபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. ஆண்டிப்பட்டி அருகே அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர்கள்; ஆர்.டி.ஓ. நேரில் விசாரணை
ஆண்டிப்பட்டி அருகே அங்கன்வாடி மையத்துக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அனுப்ப மறுத்து வருவது குறித்து பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயபிரித்தா நேரில் விசாரணை நடத்தினார்.
5. திருமுல்லைவாயலில் திருமணமான 19 நாளில் நர்சிங் மாணவி தூக்கில் பிணமாக தொங்கினார்; ஆர்.டி.ஓ. விசாரணை
திருமுல்லைவாயலில், திருமணமான 19 நாளில் நர்சிங் மாணவி, தூக்கில் பிணமாக தொங்கினார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.