மாவட்ட செய்திகள்

மருத்துவக்கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி, 3 பேர் மீது வழக்கு + "||" + The fraud is claimed to be bought at a medical college

மருத்துவக்கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி, 3 பேர் மீது வழக்கு

மருத்துவக்கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி, 3 பேர் மீது வழக்கு
மருத்துவக்கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த முன்னாள் ராணுவவீரர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்குடி,

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் தேவராஜ்(வயது 55). இவர் தனது மகனுக்கு மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்க முயற்சி செய்தார். அப்போது காரைக்குடியைச் சேர்ந்த முன்னாள் ராணுவவீரரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிமான அமலன் என்பவருடன் தேவராஜ்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமலன், மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி காரைக்குடியைச் சேர்ந்த அந்தோணி காணிக்கைராஜ் என்பவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

 இதையடுத்து அமலன், அந்தோணி காணிக்கைராஜ் மற்றும் காரைக்குடியை சேர்ந்த சண்முகநாதன் ஆகியோர் மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சத்தை தேவராஜிடம் இருந்து வாங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து தேவராஜ் கேட்டபோது அவர்கள் பதில் ஏதும் கூறவில்லை. இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த தேவராஜ், இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

 அதன்பேரில் அமலன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. கூட்டப்புளியில் மீன்பிடிப்பதில் இருதரப்பினர் மோதல்; 16 பேர் மீது வழக்கு
கூட்டப்புளியில் மீன்பிடிப்பதில் இருதரப்பினர் மோதிக் கொண்டனர். இதுதொடர்பாக 16 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2. வாடகைக்கு வாங்கிய கார்களை வெளிமாநிலங்களில் விற்று மோசடி; ஒருவர் கைது
வாடகைக்கு வாங்கிய கார்களை வெளிமாநிலங்களில் விற்று மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
3. கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கர்ப்பிணியாக்கி திருமணத்துக்கு மறுத்தவர் மீது வழக்கு
கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. காதலித்த பெண் இறந்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
காதலித்த பெண் இறந்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. பணம் எடுக்க உதவுவதுபோல் ஏ.டி.எம்.கார்டை மாற்றி பெண்ணிடம் நூதன மோசடி மர்ம நபருக்கு வலைவீச்சு
மணப்பாறை அருகே பணம் எடுக்க உதவுவதுபோல் ஏ.டி.எம்.கார்டை மாற்றி பெண்ணின் வங்கி கணக்கில் பணம் எடுத்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.