மாவட்ட செய்திகள்

மழைநீருடன் கழிவுநீர் கலந்து நிற்பதற்கு எதிர்ப்பு: பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை + "||" + Siege of Poonamalle Municipal Office Public demonstration

மழைநீருடன் கழிவுநீர் கலந்து நிற்பதற்கு எதிர்ப்பு: பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

மழைநீருடன் கழிவுநீர் கலந்து நிற்பதற்கு எதிர்ப்பு: பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
மழைநீருடன் கழிவுநீர் கலந்து நிற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லி நகராட்சி 14–வது வார்டுக்குட்பட்ட பாபாபீ தர்கா, கோரிமேடு போன்ற பகுதிகளில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலைகளிலேயே கழிவு நீரோடு கலந்து நிற்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் 30 க்கும் மேற்பட்டோர் பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தாங்கள் கோரிக்கையாக எடுத்து வந்த மனுவை நகராட்சி கமி‌ஷனரிடம் கொடுத்தனர்.

இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:–

இந்த பகுதியில் முறையாக மழை நீர் கால்வாய் இல்லை.

இதனால் மழைக்காலங்களில் மழை நீரோடு கழிவுநீர் கலந்து வெளியேற வழி இல்லாமல் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ– மாணவிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

இது குறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இங்குள்ள கழிவுநீரை அகற்றி மழை நீர் கால்வாய் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.தொடர்புடைய செய்திகள்

1. மானாமதுரை அருகே குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
மானாமதுரை அருகே குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. அவினாசி அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
அவினாசி அருகே குடிநீர், கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு உள்பட அடிப்படை வசதிகளை கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. ஊதிய உயர்வு வழங்கக்கோரி போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊதிய உயர்வு வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4. கத்தாரில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்தது, வெள்ளம்
கத்தாரில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்ததால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
5. அதிகாரிகளுக்கு மிரட்டல்: மழைநீர் கால்வாய் பணியை தடுத்த 2 பேர் கைது
சிட்லபாக்கம் பேரூராட்சி பகுதியில் அதிகாரிகளை மிரட்டியதுடன், தற்காலிக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை தடுத்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.