பழவேற்காடு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணி: கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்


பழவேற்காடு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணி: கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 20 Sept 2018 4:35 AM IST (Updated: 20 Sept 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

பழவேற்காடு முகத்துவாரத்தில் தூர்வாரும் பணியை கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பழவேற்காட்டில் ஏரியின் நீர் கடலில் சென்று கலக்க முடியாத நிலையில் முகத்துவாரம் தூர்ந்து மணல் மேடானது. இதன் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து கடந்த 2 நாட்களாக மீனவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

அதன்படி நேற்று பழவேற்காடு ஏரி முகத்துவார பகுதிக்கு படகு மூலம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், சிறுணியம் பலராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பூமி பூஜை செய்து பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தனர்.

Next Story