அரியலூரில் ரெயில்வே தனியார் மயமாக்கப்படுவதை கைவிடக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரியலூரில் ரெயில்வே தனியார் மயமாக்கப்படுவதை கைவிடக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2018 7:06 AM IST (Updated: 20 Sept 2018 7:06 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் ரெயில்வே தனியார் மயமாக்கப்படு வதை கைவிடக்கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தாமரைக்குளம், 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் ரெயில் நிலைய பொறியாளர் அலுவலகம் முன்பு எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தினர் (தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன்) ஏ.ஜ.ஆர்.பி. வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் துரைசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செல்வகுமார் கண்டன உரையாற்றினார். குறைந்த பட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். கொங்கன் ரெயில் திட்டத்தை கைவிடவேண்டும். ரெயில்வே தனியார் மயமாக்கப்படுவதை கைவிட வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 1968-ம் ஆண்டு பஞ்சபடி போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த 9 ஊழியர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் சரவணன், புருஷோத்தமன், கார்த்தி, அருண்குமார் உள்பட ரெயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வீரமுத்து நன்றி கூறினார்.

Next Story