களக்காடு அருகே மர்ம நோய் தாக்கி 50 ஆடுகள் சாவு
களக்காடு அருகே மர்ம நோய் தாக்கி 50 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
களக்காடு,
களக்காடு அருகே மர்ம நோய் தாக்கி 50 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
50 ஆடுகள் சாவு
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழப்பத்தையை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45) ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் 50 ஆடுகள் மர்ம நோய் தாக்கி இறந்தன.
இதுகுறித்த தகவல் அறிந்த நெல்லை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ஜெயக்குமார், அம்பை உதவி இயக்குனர் குருசாமி, களக்காடு வட்டார கால்நடை துறை முதன்மை டாக்டர் ஆபிரகாம் ஜாப்ரி மற்றும் டாக்டர்கள் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
ரத்த மாதிரி சேகரிப்பு
மேலும் கால்நடைத்துறை நோய் புலனாய்வு குழுவினர் டாக்டர் முருகன் தலைமையில் ஆடுகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து சென்னை கால்நடை ஆராய்ச்சி நிலையத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் நோய் பரவுவதை தடுக்க சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆடுகளுக்கு தடுப்பூசி போடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் கூறினர்.
Related Tags :
Next Story