நாகர்கோவிலில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: நெல்லையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு
நாகர்கோவிலில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வருகை தரும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நெல்லையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
நெல்லை,
நாகர்கோவிலில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வருகை தரும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நெல்லையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது என்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பிரபாகரன், தச்சை கணேசராஜா ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.
நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பிரபாகரன் எம்.பி. வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
தமிழக அரசு சார்பில், முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாளை (சனிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று (வெள்ளிக்கிழமை) வருகை தருகிறார்கள்.
நெல்லை வழியாக வரும் அவர்களுக்கு இன்று மாலை 3 மணியளவில் நெல்லை–கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கே.டி.சி.நகரில் வைத்து நெல்லை புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. விழாவில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை கழகம் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். ஏற்பாடுகளை நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் நான் (பிரபாகரன்) செய்து வருகிறோம்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
வரவேற்பு
நாகர்கோவிலில் நாளை (சனிக்கிழமை) நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு செல்கிறார். இதையொட்டி, அவருக்கு நெல்லை–கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் இன்று மாலை 3 மணியளவில் நெல்லை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை கழகம் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story