மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை + "||" + If you use plastic products action

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை
கோத்தகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கோத்தகிரி,


கோத்தகிரி பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி வளாகத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு மாநில நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் துணைத் தலைவர் ராஜன், சுகாதார ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் செயல் அலுவலர் குணசேகரன் பேசும் போது, நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டி மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது. எனவே கோத்தகிரி பகுதியில் பிளாஸ் டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அபராதத்தொகை வசூலிக்கப்படும்.
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் அபராதம் விதிக்கப்படும். இதே போல திருமண மண்டப உரிமையாளர்கள் தங்களது வளாகத்திற்குள் பிளாஸ்டிக் பொருட்கள், மறு முறை பயன்படுத்த முடியாத தண்ணீர் கப்புகள், குடிநீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கையுறைகள் போன்றவற்றை பயன்படுத்தினால் மண்டப உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

இது மட்டுமின்றி மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட 19 இனங்களை சேர்ந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் பிளாஸ்டிக் சில்லறை விற்பனையாளர்களுக்கு ½ கிலோவிற்கு ரூ.1000-ம், மொத்த விற்பனையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம், திருமண மண்டபங்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ குற்றம் என்பதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். இதில், வியாபாரிகள், தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள், பொது நிறுவனங்கள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் தலைமை எழுத்தர் நாகராஜன் நன்றி கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி
திருவொற்றியூரில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
2. நீடாமங்கலத்தில் பரபரப்பு: தீயில் கருகி கிடந்த மோட்டார்சைக்கிள் குடும்ப தகராறில் தீ வைத்த வாலிபருக்கு போலீசார் எச்சரிக்கை
நீடாமங்கலத்தில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் மோட்டார்சைக்கிள் ஒன்று தீயில் கருகி கிடந்தது. இதுபற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குடும்ப தகராறில் வாலிபர் ஒருவர் மோட்டார்சைக்கிளுக்கு தீ வைத்தது தெரியவந்தது. அவரை ரெயில்வே போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
3. பிளாஸ்டிக் மாற்று பொருட்களை உற்பத்தி செய்ய கடனுதவி கலெக்டர் நடராஜன் தகவல்
பிளாஸ்டிக் மாற்று பொருட்களை உற்பத்தி செய்ய மகளிர் சுய உதவிக்குழு, தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
4. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை எதிரொலி: ஆற்றங்கரையோர பகுதியில் வளரும் சேம இலைக்கு திடீர் ‘மவுசு’
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை எதிரொலியால் ஆற்றங்கரையோர பகுதியில் வளரும் சேம இலைக்கு திடீரென மவுசு ஏற்பட்டுள்ளது.
5. பிளாஸ்டிக் ஆதிக்கத்தில் இருந்து பசுமைச்சூழலை நோக்கி...!
“துணிப்பை என்பது எளிதானது, தூர எறிந்தால் உரமாவது, பிளாஸ்டிக் என்பது அழகானது, விட்டு எறிந்தால் விஷமாவது, ஆகவே! தாங்கள் பாத்திரங்கள் கொண்டுவந்து பார்சல்களுக்கு ஐந்து சதவீதம் தள்ளுபடி பெறுங்கள்’ என்று எழுதிவைத்து திருநெல்வேலியில் உள்ள உணவகங்கள் புத்தாண்டின் முதல் நாளிலேயே பிளாஸ்டிக் எதிர்ப்புக்கு எதிரான தங்கள் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கிவிட்டன.