ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து விவரங்களை வெளியிடுவது கட்டாயம் : சுதீர் முங்கண்டிவார்


ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து விவரங்களை வெளியிடுவது கட்டாயம் : சுதீர் முங்கண்டிவார்
x
தினத்தந்தி 21 Sept 2018 4:36 AM IST (Updated: 21 Sept 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களையும், குடும்பத்தினரின் சொத்து விவரங்களையும் வெளியிடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் நிதிமந்திரி சுதீர் முங்கண்டிவார் வலியுறுத்தினார்.

மும்பை,

மராட்டிய மாநில மந்திரி சபை கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் பரிந்துரை ஒன்றை செய்தார். .

அதில், மாநிலத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது அசையா சொத்து விவரங்களை மட்டும் வெளியிட்டு வருகின்றனர். அவர்களின் அசையும் சொத்துகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்து விவரங்களையும் ஆண்டுதோறும் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார்.

இதுகுறித்து நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல்வாதிகள் நாங்கள் ஆண்டுதோறும் சொத்து விவரங்களை அறிவித்து வருகின்றோம். இதேபோல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது அனைத்து சொத்து விவரங்களையும், அவர்களது குடும்பத்தினரின் சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் பரிந்துரை செய்துள்ளேன்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் மக்கள் பணியாளர்கள் தான். எனவே அவர்களின் சொத்து விவரங்களை அறிய பொது மக்களுக்கு உரிமை உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story