நெல்லை மாநகராட்சிக்கு வரி செலுத்தாத கட்டிடங்கள் ஜப்தி செய்யப்படும் ஆணையாளர் எச்சரிக்கை


நெல்லை மாநகராட்சிக்கு வரி செலுத்தாத கட்டிடங்கள் ஜப்தி செய்யப்படும் ஆணையாளர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Sep 2018 9:30 PM GMT (Updated: 21 Sep 2018 12:34 PM GMT)

நெல்லை மாநகராட்சிக்கு வரி செலுத்தாத கட்டிடங்கள் ஜப்தி செய்யப்படும் என நெல்லை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர் தெரிவித்துள்ளார்.

நெல்லை, 

நெல்லை மாநகராட்சிக்கு வரி செலுத்தாத கட்டிடங்கள் ஜப்தி செய்யப்படும் என நெல்லை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

ஜப்தி நடவடிக்கை

நெல்லை மாநகராட்சியில் 2018–2019 முதல் அரையாண்டிற்கான (30–9–2018 வரை) வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஒலி பெருக்கி மூலமாகவும், அறிவிப்புகள் அனுப்பியும், பத்திரிகை செய்தி வழியாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் சிலர் வரிகளை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், செலுத்தாதவர்களின் பட்டியல் நான்கு மண்டலங்களிலும் தயார் செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 31–ந் தேதிக்குள் மேற்படி வரிகளை செலுத்தாத கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். ஒரு வார காலத்துக்குள் நிலுவை வரியினை செலுத்தவில்லை என்றால், மேற்பட கட்டிடங்களில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

25–ந் தேதிக்குள்...

மேலும் மாநகராட்சி கடைகளை குத்தகைக்கு எடுத்துள்ளவர்களில் சிலர் அதிக அளவு நிலுவை தொகை வைத்துள்ளனர். 2 மாதத்துக்கு மேலாக குத்தகை தொகை செலுத்தாதவர்கள் வருகிற 25–ந் தேதிக்குள் நிலுவையின்றி செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story