அந்தியூரில் பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


அந்தியூரில் பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Sep 2018 10:45 PM GMT (Updated: 21 Sep 2018 7:52 PM GMT)

அந்தியூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அந்தியூர், செப்.22-

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே அந்தியூர் மற்றும் குந்துபாயூர் பகுதியினை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு அந்தியூர் பகுதி பீடி தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த அப்துல் வகாப் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், பீடிக்கு விதிக்கப்படும் ஐி.எஸ்.டி. வரியினை மத்திய அரசு தள்ளுபடி செய்யவேண்டும். பீடி தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. குந்துபாயூர் பீடி தொழிலாளர்கள் கிளை பொறுப்பாளர் சீராஜ்தீன் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி கூறினார். இதில் 100-க்கும் மேற்பட்ட அந்தியூர், குந்துபாயூர் பகுதி பீடி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் பீடி தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுவை அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் வழங்கினர்.

Next Story