மாவட்ட செய்திகள்

அந்தியூரில் பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Beedi workers demonstrated

அந்தியூரில் பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அந்தியூரில் பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அந்தியூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அந்தியூர், செப்.22-

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே அந்தியூர் மற்றும் குந்துபாயூர் பகுதியினை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு அந்தியூர் பகுதி பீடி தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த அப்துல் வகாப் தலைமை தாங்கினார்.


ஆர்ப்பாட்டத்தில், பீடிக்கு விதிக்கப்படும் ஐி.எஸ்.டி. வரியினை மத்திய அரசு தள்ளுபடி செய்யவேண்டும். பீடி தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. குந்துபாயூர் பீடி தொழிலாளர்கள் கிளை பொறுப்பாளர் சீராஜ்தீன் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி கூறினார். இதில் 100-க்கும் மேற்பட்ட அந்தியூர், குந்துபாயூர் பகுதி பீடி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் பீடி தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுவை அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

1. செருமங்கலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
செருமங்கலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காலிக்குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. தேர்தல் துணை கலெக்டர் பணியிடத்தை நிரப்பக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தேர்தல் துணை கலெக்டர் பணியிடத்தை நிரப்பக்கோரி நாகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அக்கட்சி மாவட்ட துணை செயலாளர் சந்திர பாண்டியன் தாக்கப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் நடைபெற்றது.
4. சமூக விரோதிகளின் தாக்குதலை கண்டித்து தஞ்சையில் சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சமூக விரோதிகளின் தாக்குதலை கண்டித்து தஞ்சையில் சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5. கிருஷ்ணரை பற்றி இழிவாக பேசுவதா? கி.வீரமணியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் விவகாரத்தில் இந்து கடவுள் கிருஷ்ணரை தொடர்புபடுத்தி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சமீபத்தில் சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.