மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ரூ.67¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் + "||" + MGR at Nagercoil Centenary ceremony: Edappadi Palinasamy donated Rs

நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ரூ.67¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ரூ.67¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.67¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
நாகர்கோவில்,

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவில் தமிழக முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும் போது குமரி மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-


அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படும். அகஸ்தீஸ்வரம் தாலுகா தாமரைக்குளத்தில் பழையாற்றின் குறுக்கே ரூ.5 கோடியே 23 லட்சம் செலவில் தடுப்பணை ஒன்று கட்டப்படும். கோவளம் கிராமத்தில் ரூ.12 கோடியே 75 லட்சம் மதிப்பிலும், அழிக்கால் கிராமத்தில் ரூ.10 கோடியே 10 லட்சம் மதிப்பிலும், பெரியநாயகி தெருவில் ரூ.7 கோடியே 66 லட்சம் மதிப்பிலும் 2019-2020-ம் ஆண்டில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும்.

கிள்ளியூர் ஒன்றியம் இணையம்புத்தன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட இனயம் கிராமத்தின் கிழக்கே தேவாலயம் இருக்கும் பகுதியில் ரூ.9 கே ாடி மதிப்பில் ஒரு தூண்டில் வளைவு 2019-2020-ம் ஆண்டில் அமைக்கப்படும். விளவங்கோடு தாலுகா மார்த்தாண்டம்துறை கிராமத்தில் சர்ச்சுக்கு முன்பு இடது பக்கம் மற்றும் வலது பக்கம் உள்ள வீடுகளை பாதுகாக்கும் பொருட்டு 80 லட்சம் ரூபாய் மதிப்பில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் 2019-2020-ம் ஆண்டில் அமைக்கப்படும்.

2019-2020-ம் ஆண்டில் தோவாளை, தடிக்காரன்கோணம், கீரிப்பாறை லேபர் காலனி சாலையில் கீரிப்பாறை ஆற்றின் குறுக்கே ரூ.4 கோடி மதிப்பில் ஒரு புதிய உயர்மட்ட பாலம், திருவட்டார், பேச்சிப்பாறை, குற்றியார், தச்சமலை சாலையில் கிழவியார் ஆற்றின் அருகில் ரூ.4 கோடி மதிப்பில் ஒரு புதிய உயர்மட்ட பாலம், தோவாளை, திடல் ஊராட்சி பகுதியில் கடுக்கரை-இரவிபுதூர் சாலையில் கஞ்சி ஆற்றின் குறுக்கே ரூ.2 கோடி மதிப்பில் ஒரு புதிய உயர்மட்ட பாலம், குருந்தங்கோடு-தலக்குளம், இரணியல்-முட்டம் சாலை முதல் தலக்குளம் சாலையில் வள்ளி ஆற்றின் குறுக்கே ரூ.2 கோடி மதிப்பில் புதிய உயர்மட்டப்பாலம் கட்டப்படும்.

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். அவருடைய பகுதியில் பல்வேறு சாலைகளை அமைக்க வேண்டுமென்று தெரிவித்திருந்தார். அந்த சாலையெல்லாம் இன்றைக்கு படிப்படியாக சி.ஆர்.எப். மூலமாக எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன. பெருஞ்செல்வவிளை சாலையில் ரூ.1 கோடி மதிப்பில் சிறுபாலம் கட்டப்படும். வட்டக்கோட்டை-அம்சி சாலையில் ரூ.45 லட்சம் மதிப்பில் சிறுபாலம் கட்டப்படும். குஞ்சிருப்புவிளை- மாதாபுரம் சாலையில் ரூ.35 லட்சம் மதிப்பில் சிறுபாலம் கட்டப்படும். கோட்டார்-செட்டிகுளம் பகுதியில் சுமார் ரூ.340 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும்.

இதற்கு நிலம் எடுப்பு பணிக்காக தமிழக அரசு ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் வடசேரி- ஒழுகினசேரி பகுதியில் ஒரு உயர்மட்ட பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி ரூ.89 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. விரிவான திட்ட அறிக்கை கிடைத்த பின் உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும். நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின்கீழ் சி.ஆர்.ஐ.டி.பி. 2018-2019-ம் திட்டத்தில் 8 சிறுபாலங்கள் ரூ.159 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். மார்த்தாண்டம்- கருங்கல் சாலையில் குழித்துறை மற்றும் இரணியல் ரெயில் நிலையங்களுக்கு இடையே சாலை மேம்பாலம் கட்டப்படும். விளவங்கோடு அரசு மருத்துவமனைக்கு எண்ணியல் ஊடுகதிர் கருவி, மீயொலி பரிசோதனைக் கருவி போன்ற மருத்துவக் கருவிகள் வழங்கி மேம்படுத்தப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முன்னதாக அரசு செயலாளர் ரா.வெங்கடேசன் வரவேற்று பேசினார். சட்டசபை சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து பேசினார். மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை, மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், விஜயகுமார் எம்.பி. ஆகியோர் பேசினர். முடிவில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நன்றி கூறினார்.

முன்னதாக நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா நடைபெறும் கல்லூரி மைதானத்துக்கு மதியம் 3.10 மணிக்கு புறப்பட்டார். அங்கு வந்த அவர், பந்தலுக்கு வெளியே செய்தி-மக்கள் துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளத்துறை, பள்ளி, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.

பின்னர் விழா மேடைக்கு சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு தபால் அட்டையை முதல்- அமைச்சர் வெளியிட, துணை முதல்வர் பெற்றுக் கொண்டார்.

விழாவில் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பந்தல் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் விழா நடைபெறும் கல்லூரி மைதானத்துக்கு செல்லும் சாலைகளின் இருபுறமும் வண்ண தோரணங்கள், சுவர் விளம்பரங்கள், பேனர்கள், அலங்கார வளைவுகள் என நாகர்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.

போலீஸ் டி.ஜி.பி. விஜயகுமார் மேற்பார்வையில் ஐ.ஜி.சண்முகராஜேசுவரன் தலைமையில் 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சுழலும் கேமரா பொருத்தப்பட்ட போலீஸ் வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டன. முதல்-அமைச்சர் வருகையையொட்டி நாகர்கோவில் நகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

விழாவில் அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (கிழக்கு), ஜாண்தங்கம் (மேற்கு), மருத்துவ அணி முன்னாள் மாவட்ட செயலாளர் சி.என்.ராஜதுரை, மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், முன்னாள் அமைச்சர் கே.பி.ராஜேந்திரபிரசாத், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிருஷ்ணகுமார், நெல்லை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் கிருஷ்ணதாஸ், அரசு வக்கீல் ஞானசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஜெயசீலன், இலக்கிய அணி முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு முன்னாள் மாவட்ட செயலாளர் இ.என்.சங்கர், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.ஜே.கே.திலக், 36-வது வட்ட செயலாளர் ஆர்.கிருஷ்ணன், மகளிரணி மாவட்ட செயலாளர் டாரதி சாம்சன்,

மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் நரசிங்கமூர்த்தி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச்செயலாளர் அழகேசன், வக்கீல் பிரிவு துணை செயலாளர் லெட்சுமிகாந்த், திட்டுவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் ஆனந்த், மாவட்ட முன்னாள் ஊராட்சி தலைவர் சாரதாமணி, ஈத்தாமொழி கிளை செயலாளர் மணி, டாக்டர் ரவீந்திரன், நகர இளைஞரணி இணைச்செயலாளர் மிக்கேல்ராஜ், வடசேரி சந்தை வியாபாரிகள் நலச்சங்க பொருளாளர் கே.பரமேஸ்வரன், துணைத்தலைவர் பிரேமன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் சத்தியதாஸ், வட்ட செயலாளர் பிரபு, ராமபுரம் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் பாஸ்கரன், தொழிலதிபர்கள் ராஜன், ஜெஸீம், கொட்டாரம் பேரூர் பொருளாளர் சந்திரசேகரன், கண்ணன், ராஜபாண்டியன், மதுசூதனபெருமாள், ஜாண்கிறிஸ்டோபர், ஏ.சுந்தர்சிங், யு.ராணி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் ஷேக், அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் தர்மர், வக்கீல் குரூஸ்செலின் ராணி, சகாயம், கனகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா திரளான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
2. கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் விழா: தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் பரணேற்று விழாவில் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
3. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா ஏராளமான பக்தர்கள்சாமி தரிசனம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
4. அரவக்குறிச்சி, க.பரமத்தி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கல்விச்சீர் வழங்கும் விழா
அரவக்குறிச்சி, க.பரமத்தி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது.
5. அரிமளம் அருகே நெடுங்குடி கைலாசநாதர் கோவிலில் சிவராத்திரி விழா விடிய, விடிய பக்தர்கள் வழிபாடு
அரிமளம் அருகே உள்ள நெடுங்குடி கைலாசநாதர் கோவிலில் சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய வழிபாடு நடத்தினார்கள்.